ஹர்திக் பாண்டியாவை கட்டுப்படுத்துவது இனி கஷ்டம்தான் – இர்பான் பதான் ஓபன் டாக்!

0
1012
Hardik pandya

கடந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த டி20 உலக கோப்பையின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைய, இந்திய டி20 அணி சத்தம் இல்லாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது!

இந்திய டி20 அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அதிகாரப்பூர்வமான முறையில் விலக்கப்படவில்லை என்றாலும், ஆனால் மறைமுகமாக விலக்கியே வைக்கப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

தற்பொழுது ஒருநாள் இந்திய அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது தலைமையில் இஷான் கிஷான், உம்ரான் மாலிக், கில், ராகுல் திரிபாதி, சிவம் மாவி போன்ற இளம் வீரர்களைக் கொண்டு புதிய அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மட்டும் இல்லாமல் ஒரு பந்துவீச்சாளராகவும் புதிய பந்தை கையில் எடுத்து முன்னணியில் இருந்து அணிக்கு செயல்பட்டு வருகிறார். நியூசிலாந்துடன் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தியிருந்தார். மேலும் அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” இந்தத் தொடரில் நான் பார்த்த பந்துவீச்சாளர்களில் ஹர்திக் நல்ல ஸ்விங் பெற்றுள்ளார். அர்ஸ்தீப், பெர்கூஷன் யாரைக் காட்டிலும் அவர் பந்து மிக நன்றாக ஸ்விங் ஆனது. அவரின் சிறப்பு என்னவென்றால், அவர் ஒரு நல்ல ரிலீஸ் புள்ளியைக் கொண்டு இருக்கிறார். அவரால் அவுட் மற்றும் இன் ஸ்விங் இரண்டையும் வீச முடிகிறது. மேலும் ஒரு பந்துவீச்சாளராக பேட்டரி பலவீனங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசியவர்
” நியூசிலாந்து உடன் கடைசி டி20 போட்டியில் பின் ஆலன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோரை அவர் ஸ்லிப்பில் வெளியேற்றியது அவரது பந்துவீச்சில் ஒரு எக்ஸ் காரணி இருப்பதை காட்டுகிறது. அவர் கூடுதல் பவுன்ஸ் பெறுகிறார். அவரது பந்து மிக நன்றாக சீமில் இறங்குகிறது. அதனால்தான் அவர் புதிய பந்தை எடுத்து பந்து வீசுகிறார். தான் கேப்டன் என்பது அவருக்கு தெரியும். மேலும் புதிய பந்தில் விக்கட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கின்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்!