இந்திய கிரிக்கெட்

டி20 ஐசிசி ரேங்கிங்.. நம்பர் 1 இடத்தை தட்டி தூக்கிய ஹர்திக் பாண்டியா.. இந்திய வீரர்கள் கிடுகிடு முன்னேற்றம்

கடந்த வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த முடிந்த டி20 உலக கோப்பைக் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் டி20 கிரிக்கெட் தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டு வருகிறார்கள். இந்த வகையில் ஹர்திக் பாண்டியா தன் வாழ்நாளில் சிறந்த உச்சத்தை டி20 கிரிக்கெட் பட்டியலில் எட்டி இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரின் செயல்பாடு மிகச் சிறப்பாக தொடர்பு முழுவதும் இந்திய அணிக்கு அமைந்திருந்தது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா முதல் முறையாக டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 22 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதே புள்ளிகள் உடன் இலங்கையின் வனிந்து ஹசரங்கா இரண்டாவது இடத்தில் தொடர்கிறார்.

இதே பட்டியலில் முதல் 10 இடத்தில் ஹர்திக் பாண்டியா தவிர வேறு எந்த இந்திய வீரர்களும் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் இந்திய சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 12-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் ஆதில் ரசீத் 718 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் முதல் பத்து இடத்தில் அக்சர் படேல் 657 புள்ளிகள் எடுத்து 8வது இடத்திலும், குல்தீப் யாதவ் 654 புள்ளிகள் எடுத்து ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஹர்ஷா போக்லே வெளியிட்ட.. பெஸ்ட் 2024 டி20 உலகக்கோப்பை பிளேயிங் XI.. ஆஸி கிரிக்கெட்டுக்கு பதிலடி

இதே பட்டியலில் முதல் 20 இடங்களில் டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா 640 புள்ளிகள் எடுத்து 12வது இடத்திலும், மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய அர்ஸ்தீப் சிங் 635 புள்ளிகள் உடன் 13 வது இடத்திலும் இருக்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இதே தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த ரவி பிஸ்னாய் வாய்ப்புகள் இல்லாததால் 608 புள்ளிகள் உடன் 22வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by