ஐபிஎல் 2025

அந்த ஒருவரால் எங்கள் அணி தோற்றுவிடுமோ என்று நினைத்தேன்.. அப்பதான் அந்த அற்புதம் நடந்துச்சு – ஹர்திக் பாண்டியா

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் மிடில் வரிசை பேட்ச்மேன் திலக் வர்மா 33 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். ரிக்கல்டன் 41 ரன்கள் மற்றும் சூர்ய குமார் யாதவ் 40 ரன்கள் குவித்தனர். இறுதி கட்டத்தில் களமிறங்கிய நமன் திர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளை எதிர் கொண்டு 38 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அஅணி களம் இறங்கியது. டெல்லி அணியை பொறுத்தவரை இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய கருண் நாயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளை எதிர்கொண்டு 89 ரன்கள் அபாரமாக குவித்து டெல்லி அணியினை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா கூறும் போது “இது போன்ற வெற்றிகள் எப்போதுமே ஒரு சிறப்பு வாய்ந்த விஷயமாகும். கருண் நாயர் பேட்டிங் செய்த விதம் மிக அற்புதமானது. அவர் ஆடிய விஷத்தை பார்த்தபோது போட்டி எங்கள் கையை விட்டுப் போவது போல தோன்றியது. இருப்பினும் அந்த சமயத்தில் கரன்சர்மா தனது அற்புதமான குணத்தை வெளி காட்டினார். பௌண்டரி எல்லைகள் 60 மீட்டர் நீளத்தில் இருக்கும்போது அவர் அதுக்கு தகுந்தவாறு பந்துவீசி விதம் அற்புதமானது. நாங்கள் ஒருபோதும் போட்டியை கைவிடவில்லை.

இதையும் படிங்க:பும்ராவின் 19வது ஓவரில் நிகழ்ந்த மேஜிக்.. ஹாட்ரிக் ரன் அவுட்டில் சரிந்த டெல்லி அணி.. 12 ரன்னில் மும்பை திரில் வெற்றி

போட்டியில் நாங்கள் இருக்க விரும்புகிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம். எல்லோரும் தங்கள் கையை உயர்த்தினார்கள். எனவே எங்களது வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. எங்களது பேட்டிங் வரிசையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வீரர்களை பார்மில் வைத்திருக்க விரும்பினேன். இரண்டாவது பாதியில் பனிமூட்டமும் இருந்தது. எனவே எந்த சமயத்திலும் வாய்ப்புகளை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து போராடுங்கள் என்பது தான் எங்கள் அணியின் முக்கிய எண்ணமாக இருந்தது. ஓரிரு கேட்ச் வாய்ப்புகள் போட்டியை மாற்றும் என்று தெரியும். முன்பு எனக்கு அது கூட நடந்துள்ளது. ஒரு வெற்றி உங்கள் வேகத்தை அப்படியே தலைகீழாக மாற்றும்” என்று ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts