இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா ஒருவரும் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்த கோப்பை வென்றது குறித்து பாண்டியா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய அணி சாம்பியன்
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட வெற்றி பெற்றது. அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளாசனை வெளியேற்றி முக்கிய திருப்புமுனையை ஹர்திக் பாண்டியா ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த தருணமே இந்திய அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
தற்போது நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணிக்காக தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இரண்டாவதாக வெல்லும் ஐசிசி கோப்பை இதுவாகும். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா இரண்டு கோப்பைகள் அல்ல ஐந்து முதல் ஆறு ஐசிசி கோப்பைகள் வெல்வது தனது முக்கிய நோக்கம் என்று சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
என் ஆசை இதுதான்
இது குறித்து பாண்டியா கூறும் போது ” என்னைப் பொருத்தவரை சாம்பியன்ஷிப்பை வெல்வது மட்டுமே எனது முக்கிய நோக்கம். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்ற போது இது இன்னும் முடியாது, இன்னும் 5 முதல் 6 கோப்பைகள் வேண்டும் என்று கூறினேன். சொன்னது போலவே இப்போது அதில் ஒன்று சேர்க்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஹர்திக் பாண்டியா கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:கோப்பை ஜெயிச்சு கொடுத்த ரோகித்துக்கே இடமில்லை.. 4 இந்திய வீரர்.. 0 பாக் வீரர்.. அஸ்வினின் CT பிளேயிங் லெவன்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆன இந்திய அணி டி20 உலக கோப்பையை இந்தியாவில் வெல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு ஓய்வு பெறும் முடிவில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






