“சின்னச்சாமில செஞ்சுரி அடிக்கலாம்.. ஆனா சிஎஸ்கே சேப்பாக்கத்துல கோலி பாச்சா பலிக்காது” – ஹர்பஜன் சிங் பேட்டி

0
161
Virat

இந்த வருடம் 17ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த போட்டி வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டு பெரிய தலைகள் மோத இருக்கின்ற காரணத்தினால், முதல் போட்டி குறித்து ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி ரன்கள் குவித்திருந்த போதும், அவரால் அந்த அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட ரன்கள் பெரிய தாக்கத்தை கொடுக்கவில்லை என்பது புள்ளிவிபரமாக இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி வரலாறு கவலை அளிப்பதாக இருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூரின் சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதற்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றும், சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” சேப்பாக்கம் மைதானத்தில், விராட் கோலியின் ஒட்டு மொத்த செல்திறனை வைத்து பார்க்கும் பொழுது, அங்கு அவருடைய மகத்துவம் பெரிய அளவில் இல்லை. ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக சேப்பாக்கம் மைதானத்தில் டென்னிஸ் பால் பவுண்ஸ்க்கு எதிராக விளையாடுவது தந்திரமான ஒன்று.

- Advertisement -

ஸ்டம்ப் டு ஸ்டம்ப் சிறப்பாக வீசக்கூடிய ரவீந்திர ஜடேஜா அந்த அணியில் இருக்கிறார். அவர் ஒரு பந்தை திருப்புவார், ஒரு பந்து தாழ்வாகச் செல்லும். இதை விளையாடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது.

உண்மையில் விராட் கோலி 20 ஓவர்கள் நின்று பேட்டிங் செய்ய விரும்பினால் மட்டுமே ஒரு மேட்ச் வின்னிங் நாக் அங்கு விளையாட முடியும். சின்னசாமி மைதானத்தில் அடிக்கக்கூடிய இரண்டு சதங்கள் கூட, சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு உத்தரவாதம் தராது.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்க்கு என்சிஏ கொடுத்த சிக்னல்.. ஐபிஎல் டி20 உலககோப்பை.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2016ஆம் ஆண்டு போன்று விராட் கோலி பெரிய அளவில் ரன்களை குவிக்கும் ஒரு சீசன் அந்த அணிக்கு மீண்டும் தேவைப்படுகிறது. அவர் ரன்கள் அடித்தால் அந்த அணி தொடர்ந்து முன்னேறும். மேலும் அந்த அணியில் மேக்ஸ்வெல், படிதார், கேமரூன், பாப் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.