வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுத்த 15 பேர் கொண்ட அட்டகாசமான இளம் இந்திய அணி!

0
14627
Harbhajan

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைத் தோற்ற இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டங்களுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது!

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது. 2013-15 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்திற்கான இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை மாதம் 12ஆம் தேதி ஆரம்பிக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்புக்கு இது முக்கியமான ஒருநாள் கிரிக்கெட் தொடராகும்.

இதற்கு அடுத்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆரம்பிக்கிறது. கடைசி ஐந்தாவது போட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்று மொத்தச் சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது.

இறுதியாக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட இளம் இந்திய அணியை ஹர்பஜன் சிங் தேர்வு செய்து வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இளம் இந்திய அணி:

பேட்ஸ்மேன்கள்:
சுப்மன் கில்
யாசஸ்வி ஜெய்ஸ்வால்
ருத்ராஜ் கெய்க்வாட்
சூரியகுமார் யாதவ்
ரிங்கு சிங்
திலக் வர்மா

விக்கெட் கீப்பர்கள்:
இஷான் கிஷான்
ஜிதேஷ் சர்மா

ஆல் ரவுண்டர்கள்:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
அக்சர் படேல்

ஸ்பின்னர்கள்:
யுஸ்வேந்திர சாகல்
ரவி பிஸ்னோய்

ஃபாஸ்ட் பவுலர்கள்:
அர்ஸ்தீப் சிங்
ஹர்ஷித் ராணா
ஆகாஷ் மத்வால்