துணை கேப்டன் விசயத்தில் அஷ்வினை சேர்க்காத ஹர்பஜன் சிங் – தொடரும் உரசல்!

0
1017
Harbhajan singh

இந்திய அணியின் எதிர்கால வீரராக கருதப்பட்ட கேஎல்.ராகுலின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் அவரது பேட்டிங் செயல்பாடு கொஞ்சமும் திருப்தி அளிப்பதாக இல்லை!

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வரிசையில் இறங்கி அழுத்தத்தால் ரன்கள் எடுக்க முடியாமல் அணி மீது அழுத்தத்தை உருவாக்கிய கேஎல் ராகுல் இருந்தார். அதற்கு முந்தைய டி20 உலக கோப்பையிலும் அதேதான் நடந்தது!

- Advertisement -

தற்பொழுது இந்தியாவில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் முதல் இரண்டு போட்டிகளிலும் மிக மோசமாக விளையாடிய காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிப்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அடுத்த துணை கேப்டனாக வருவதற்கு யார் சரியானவர்களாக இருப்பார்கள் என்கின்ற விவாதம் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை சமூக வலைதளத்தில் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுபற்றி கருத்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்
” என்னைப் பொறுத்தவரை போட்டி நடப்பது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இரண்டிலும் நிரந்தரமாக அணியில் இடம் பிடிக்கக்கூடிய வீரருக்கே இப்படியான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். ஜடேஜா அப்படியான வீரர் என்று நான் நினைக்கிறேன். அவருடைய திறமைக்கு அவருக்கு மேலும் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியில் அவர் ஒரு சீனியர் வீரர். தற்பொழுது ரவீந்திர ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் தரத்தை கிரிக்கெட் உலகில் எந்த வீரரோடும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் போலவே அவரும் அந்த லீகில் இருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் மீது தொடர்ச்சியாக மறைமுகமான தாக்குதலை ஹர்பஜன் சிங் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தாங்கள் விளையாடிய காலத்தில் சுழற் பந்து வீச்சிக்கு இந்த அளவுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை என்பது போல் எல்லாம் பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவிக்கு நாசுக்காக தவிர்த்து இருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் குறிப்பாக தமிழ் கிரிக்கெட் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது!