இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார். ரயில்வே அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக பல நாட்கள் கழித்து பேட்டிங் களமிறங்க போகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விராட் கோலி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை உள்நாட்டு தொடரில் விளையாடுமாறு அறிவுறுத்தியது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தொடர்ந்து அவுட் சைட் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு அவுட் ஆகி வந்தார். இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற்ற ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக ரயில்வே அணிக்கு எதிராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.
இன்றைய போட்டியில் விராட் கோலியை காண அருண் ஜெட்லி மைதானம் ரசிகர்களால் சூழப்பட்டது. எப்போதும் இல்லாத அளவில் இந்தப் போட்டி விராட் கோலி விளையாடுவதை காண ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விராட் கோலி ரன்கள் குவித்தாலும் அல்லது குவிக்காவிட்டாலும் ரஞ்சி டிராபியை ரசித்து விளையாட வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி ஒரு ரோல் மாடல். இளைஞர்கள் அவரை முன்மாதிரியாக பார்ப்பார்கள். ரன்கள் அடிக்கிறார் அல்லது அடிக்கவில்லை என்பது இரண்டாவது விஷயம். நான் விராட் கோலி ஆக இருந்தால் இந்த தருணத்தை மகிழ்ந்து விளையாடுவேன். நான் கிரிக்கெட் விளையாட துவங்கும் போது அதை அனுபவித்து விளையாடத் தொடங்கினேன். நீங்கள் விராட் கோலியின் நிலையை அடையும் போது அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவை முன்னெடுத்து நிற்கின்றன.
இதையும் படிங்க:கோலி பும்ரா இல்லை.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர் இவர்தான் – டிவில்லியர்ஸ் கருத்து
இன்பம் பின் இருக்கையை எடுத்துக் கொள்கிறது. விராட் கோலி விளையாட்டை ரசித்து இளைஞர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் நிலைத்து நிற்க வேண்டும். பூஜ்ஜியமே அடித்தாலும் விராட் கோலி என்றும் அவராகத்தான் இருப்பார். ஒருபோதும் குறைந்த வீரராக இருக்க மாட்டார் அவரது சாதனைகள் மிகப் பெரியவை. கிரீசை ஆக்கிரமித்து நின்றால் ரன்கள் எளிதாக எடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.