நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் குவித்த பொழுதும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் பௌலிங் யூனிட்டில் என்ன மாதிரியான மாற்றம் செய்ய வேண்டும்? என ஹர்பஜன்சிங் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் பெரிய ரன்கள் குறித்தும் தோல்வி அடைந்தது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
இவரைக் கொண்டு வாங்க
“இங்கிலாந்தில் பும்ரா சிராஜ் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். அங்கு பும்ரா இல்லாத போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதே போல குறுகிய வடிவங்களிலும் ஆட்டத்தை வெல்லக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள் நமக்கு இப்பொழுது தேவை. இதற்கு நாம் வருண் சக்கரவர்த்தியை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும்”
” உங்கள் அணியில் இப்பொழுது ஏன் ஷமி இல்லை என எனக்கு புரியவில்லை. உங்களிடம் பிரசித் கிருஷ்ணா இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். அவரும் நல்ல பவுலர்தான். ஆனால் அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஷமியை ஓரம் கட்டி விட்டீர்கள். பும்ரா இருந்தால் வெல்வதும் அவர் இல்லையென்றால் தோற்பதும் நமக்கு வழக்கம் ஆக்கிவிட்டது. அவர் இல்லாமலும் வெல்லும் கலையை கற்க வேண்டும்”
நான் ஏமாற்றம் அடைந்தேன்
” இந்திய அணி 358 ரண்களை தென் ஆப்பிரிக்கா அணியை துரத்த விட்டதில் நான் ஏமாற்றம் அடைந்தேன். நிச்சயம் நாம் இதை அனுமதித்திருக்கக் கூடாது. நமது பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பான லைன் அண்ட் லென்த்தில் வீசி இருக்க வேண்டும். இந்தியா விக்கெட் வீழ்த்தும் வலிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதில் அவர்கள் பணியாற்ற வேண்டும்”
இதையும் படிங்க : விராட் கோலி 9 மீட்டர் பறந்து குதிக்க.. இதுதான் ரொம்ப முக்கிய காரணம்.. வியப்பா இருக்கு – இர்பான் பதான் ஆச்சரியம்
“இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழக்கக்கூடாது. ஏனென்றால் நிறைய விஷயங்கள் ஆபத்தில் இருக்கின்றன. இந்த ஒருநாள் தொடரையும் இழந்தால் நம்முடைய நம்பிக்கை வெகுவாக உடைந்து விடும். பிறகு அது தொடர் தோல்விகளை கொண்டு வரும்” என்று கூறியிருக்கிறார்.






