விராட் கோலி 9 மீட்டர் பறந்து குதிக்க.. இதுதான் ரொம்ப முக்கிய காரணம்.. வியப்பா இருக்கு – இர்பான் பதான் ஆச்சரியம்

0
89

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் விராட் கோலி தொடர்ச்சியாக இரண்டாவது முறை சதம் அடித்திருப்பது பலரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினாலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். மூன்றாவது போட்டியில் அரை சதம் அடித்திருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார்.

இது அவர் எந்த அளவிற்கு பேட்டிங்கில் வித்தை தெரிந்தவராக இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் 37 வயதிலும் கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் தன்னை வியப்படைய வைப்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “முதலில் நாம் விராட் கோலி பற்றி பேச வேண்டும் 37 வயதுடைய ஒரு வீரர் தொடர்ச்சியாக சதங்கள் அடிப்பது, அவர் கொண்டாட குதிக்கும் விதத்தில் தெரிகிறது. அவர் தோராயமாக சதம் அடித்த பிறகு 9 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்கிறார். அவருக்கு கிரிக்கெட்டில் எந்த வகையான ஆர்வம் இருக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனார். அதற்குப் பிறகு குறைந்தது மூன்று இன்னிங்ஸ்களில் 50 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க:ருதுராஜுக்கு 2 முறை நடந்த சோகம்.. இது பழைய தென் ஆப்பிரிக்கா.. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேறாகவும் இந்திய ஆடுகளங்கள் வேறாகவும் இருப்பதை புரிந்து கொண்டார். அதனால் தற்போது மிகவும் எச்சரிக்கையாக விளையாடுகிறார். கோலி தொடக்கத்தில் ஒரு சிக்ஸர் உடன் தொடங்கினாலும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளில் மிகுந்த கவனத்தோடு விளையாடி எதிர்கொண்டார். விராட் கோலியிடம் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ந்து அவர் முன்னோக்கி விளையாடுகிறார். பேட்டிங் செய்யும்போது அவருக்கு நிறைய நேரங்கள் கிடைப்பது போல இருக்கிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -