ரோகித் வசமா சிக்கிட்டாரு.. ஹர்திக் பாண்டியா செம செக்.. இனி கஷ்டம் – மைக்கேல் வாகன் கருத்து

0
100
Vaughan

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிக மோசமாக விளையாடி வருகிறார். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா தற்பொழுது வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே இடம் பெற்று இருக்கிறார். மேலும் இம்பேக்ட் பிளேயராக வெளியிலும் அமர்ந்திருக்கிறார்.

- Advertisement -

80வது முறையாக ஒற்றை இலக்கம்

ரோஹித் சர்மா இதுவரையில் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் கூட 600 ரன்கள் எடுத்தது கிடையாது. ஒரே ஒரு முறை மட்டுமே 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். பொதுவாக மிகப்பெரிய பெயர் கொண்ட வீரர்களில் ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான செயல்பாடு கொண்ட வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ரோஹித் சர்மா வெளியேறிய பொழுது, ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அவர் 80வது முறையாக ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதாக பதிவானது. இந்த அளவிற்கு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே தற்போது கேப்டனாகவும் இல்லாததால் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருக்கு இடமும் இல்லாமல் போகலாம் என்று மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் இதை செய்யலாம்

இது குறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது ” நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிடையாது. அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இருக்கிறார். எனவே ரன் ஆவரேஜ் இல்லையென்றால் அவரால் தப்பிக்கவே முடியாது. அவர் ரோகித் சர்மாவாக இருந்திருக்காவிட்டால் இந்நேரத்திற்கு இடம் போயிருக்கும். மும்பைக்கு செய்ததை அவர் இந்திய அணிக்கு செய்ய முடியும். ஆனால் இனி மும்பைக்கு அவர் கேப்டன் கிடையாது”

இதையும் படிங்க : தோனிக்காக அப்ப.. மும்பைக்காக இப்பவா.. அசிங்கமா இல்லையா? – ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கோபம்

“இப்போது ரன் இல்லாமல் அவரால் நிச்சயம் சமாளிக்க முடியாது. அவர் ஹர்திக் பாண்டியா வந்து விட்டதால் கேப்டனாக இல்லாமல் போனதால் அவரை நீக்கவும் செய்வார்கள். நீங்கள் ஒரு நட்சத்திர வீரராக இருக்கும் பொழுது உங்கள் மீது நிறைய கவனம் இருக்கும். மீண்டும் நீங்கள் உங்களுடைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் ரிதத்திற்கு திரும்ப வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -