நேற்று அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதல் 77 ரன்னுக்கு ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த நிலையில் முதல் நான்கு விக்கெட்டை இழந்து இருந்தபோது, அடுத்து வந்த ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் விளையாட வில்லை.
சூழ்நிலைக்கு ஏற்ப மாறனும்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “இந்திய டி20 அணி தற்போது அதிரடி அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. அவர்கள் எல்லா நேரத்திலும் இப்படியே விளையாடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும். இருந்தாலும் கூட இதிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ளும்”
“நாங்கள் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து இருந்த போது அடுத்து வந்த ரிங்கு சிங் கொஞ்சம் பொறுப்பாக விளையாடியிருக்கலாம். ஹர்திக் பாண்டியா கூட ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருக்கலாம். இந்தியா 270 ரன்கள் எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால் உலக கோப்பையின் அழுத்தம் வேறு விதமாக இருக்கும்”
சூரியகுமார் யாதவுக்கு நன்றி
“இந்த போட்டியில் அமெரிக்கா இந்திய அணியை அப்செட் செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அங்கிருந்து இந்திய அணியை காப்பாற்றிய சூரியகுமார் யாதவுக்கு நன்றி சொல்கிறேன். இருந்த போதிலும் அமெரிக்கா சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தி விளையாடியது”
இதையும் படிங்க : சூர்யா உனக்கு இதுதான் மணிமகுடம்.. உன் வாழ்க்கையில இந்த இன்னிங்ஸ்தான் பெரிய திருப்தி – சேவாக் பாராட்டு
“சூரியகுமார் தனது 30 பந்துகளில் 32 ரன்கள் தான் எடுத்திருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு 19 பந்துகளில் அவர் 50 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் எப்படியான திறமை கொண்டிருக்கிறார், அவர் தன்னை எந்த அளவுக்கு நம்புகிறார்” என்பதை இது காட்டுகிறது.






