இந்திய கிரிக்கெட்

ரோகித் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு வந்தால்.. கண்டிப்பா இது நடக்கும்.. ஒரு டீம் மட்டும் கிடையாது – ஹர்பஜன் சிங் கருத்து

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி இந்த ஆண்டு ஐபிஎல் மெகா இடத்திற்கு வந்தால் அது எப்படியானதாக இருக்கும்? என இந்திய முன்னால் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை அனைத்து ஐபிஎல் அணிகளும் வெளியிட வேண்டும் என்ற செய்திகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு சோதனை

புதிய கேப்டனை கொண்டு வருவதன் மூலம் மீண்டும் அணிக்குள் உற்சாகத்தை கொண்டு வர முடியும் என மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்து புதிய கேப்டனாக ஆகி ரோகித் சர்மாவை நீக்கியது. அந்த நேரத்தில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் பெரிய வெற்றி எதையும் கேப்டனாக பெறவில்லை.

அடுத்து ஐபிஎல் தொடர் முடிந்து நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா வென்றார். இதற்குப் பிறகு அவருடைய மதிப்பு பல மடங்காக உயர்ந்திருக்கிறது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் கேப்டனாக இல்லாவிட்டால் விளையாட மாட்டார் என்றே பலரும் கூறுகிறார்கள். ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குமா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது. தற்போது அந்த அணி நிர்வாகம் பெரிய குழப்பத்தில் சிக்கி இருக்கிறது.

- Advertisement -

மிக மிக உற்சாகமாக இருக்கும்

இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறும்பொழுது “ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்படுவாரா இல்லையா என்பதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர் மெகா ஏலத்திற்கு வந்தால் அவரை எந்த அணி வாங்க முயற்சி செய்யும் என்பதும் மிக சுவாரசியமாக இருக்கும்.குறிப்பிட்ட அணிகள் மட்டும் இல்லாமல் பல அணிகள் ரோஹித் சர்மாவுக்காக போட்டி போடும்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நடந்தது வெட்கக்கேடானது.. பாபர் அசாம் இத செஞ்சே ஆகணும் – பசித் அலி விமர்சனம்

“ரோகித் சர்மா ஒரு கேப்டனாக மட்டுமில்லாமல் தலைவராகவும் மிகவும் சிறப்பானவர். அவர் நிரூபிக்கப்பட்ட ஒரு பேட்ச் வின்னர். அவருக்கு தற்போது 37 வயதாகி விட்ட போதிலும் கூட அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்க செய்கிறது. ரோகித் சர்மா மெகா ஏலத்தில் நுழைந்தால் அது ஏலத்தையே மொத்தமாக மாற்றி விடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by