வருகிற சனிக்கிழமை முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
விராட் கோலி சுற்றியே உள்ளது
ஐபிஎல் தொடர்களில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக ஆர்சிபி இருக்கிறது. கும்ப்ளே முதல் விராட் கோலி, டு பிளஸ்சிஸ் என முன்னணி வீரர்கள் அணியை வழி நடத்திய போதிலும் ஏதோ ஒரு பிரச்சனையால் இன்னும் பெங்களூர் அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு இளம் வீரரான ராஜத் பட்டிதாரை கேப்டனாக ஆர்சிபி நியமித்துள்ளது. கடந்த சீசன் இல் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் தக்க வைக்கப்பட்ட மூன்று வீரர்களில் ஒருவராக பட்டிதார் இருந்தார்.
பட்டிதார் மேலும் இந்திய உள்நாட்டு அணிகளை வழி நடத்தி இருக்கிறாரே தவிர பெரிய அளவில் ஐபிஎல் அணியயோ அல்லது சர்வதேச அணியோ வழிநடத்தியது இல்லை. இதனால் இந்த சீசன் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். பெங்களூர் அணி பொறுத்த வரை அனைத்து விஷயங்களும் விராட் கோலியை சுற்றியே சுழலுவதால் அவருக்கு முடிவுகளை எடுப்பதில் கடினமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.
இது ஒரு பெரிய சவால்
இதுகுறித்து அவர் கூறும் போது “ஒரு சீசனில் கூட வெற்றி பெறாததால், பட்டிதார் அணி எதிர்பார்ப்பின் அழுத்தத்தில் இருக்கிறது. நீங்கள் அதற்கு ஏற்ப வாழ வேண்டும் உங்கள் ஆட்டத்தையும் விளையாட வேண்டும். பெங்களூர் அணியை பொறுத்தவரை விராட் கோலியை சுற்றி அனைத்தும் இருக்கிறது. அவர் ஒரு நல்ல சீசனை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெங்களூர் அணி பட்டிதாரை 5 சீசன்களுக்கு கேப்டனாக நியமித்துள்ளது.
இதையும் படிங்க:100வது டெஸ்டில் தோனியை வைத்து இந்த பிளான் பண்ணேன்.. ஆனா நடக்கல.. இப்போ மகிழ்ச்சியா இருக்கு – அஸ்வின் உருக்கம்
ஆனால் இது அவருக்கு சரியாக நடக்கவில்லை என்றால், அவர் எங்கு நிற்கிறார் என்று பார்ப்போம். பட்டித்தார் போன்ற ஒருவருக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இது போன்ற பெரிய அணிகளை வழி நடத்தும் போது முடிவுகளை எடுப்பது எளிதானதாக இருக்காது. யார் விளையாடுவார்கள் யார் எந்த கட்டத்தில் பந்து வீசுவார்கள் என்று பார்க்க வேண்டும். அவர் இதற்கு முன்பு அணியை வழி நடத்தியது கிடையாது. இந்தியாவை வழி நடத்துவது தான் கடினம் என்ற மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் ஒரு அணியை வழிநடத்துவது மிகவும் கடினம். ஏனென்றால் நான் அதை செய்துள்ளேன்” என்று கூறி இருக்கிறார்






