சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி இந்தத் தொடரை பும்ரா இல்லாமல் விளையாட போகிறது.
இந்த சூழ்நிலையில் பும்ரா இல்லாத இந்திய அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா உலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் காயமடைந்து வெளியேறியதால் அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாகவும், இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல முன்னாள் வீரர்கள் பும்ரா இல்லாதது பெரிய சிக்கலை ஏற்படுத்த கூடும் என்று கூறி வருகின்றனர்.
அவர் இல்லாமல் போட்டிகளை வெல்வது கடினம் எனவும், இந்திய அணிக்கு அவர் இல்லாமல் போவது பெரிய இடைவெளியை ஏற்படுத்தக் கூடியதாகவும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், மற்ற வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இருக்கும்போது நன்றாக செயல்பட வேண்டும் எனவும், பும்ரா இல்லாமல் விளையாட கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்ரா இல்லாத இந்திய அணி
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தான் ஃபேவரிட் என்று நான் இன்னும் நம்புகிறேன். பும்ரா ஒரு மிகப்பெரிய சக்தி, அவரால் பல போட்டிகள் வெல்லப்பட்டு இருக்கிறது. பும்ரா இல்லாவிட்டாலும், அர்ஷ்தீப், ஷமி, குல்தீப் மற்றும் ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்திய அணி தான் ஃபேவரிட் என்றாலும் ஒரு ஃபேவரிட் அணியை போல அவர்கள் விளையாட வேண்டும். பும்ரா இல்லாமல் போட்டிகளை வெல்ல வேண்டுமானால், அவர் இல்லாமல் விளையாடுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:CT 2013.. தோனி எப்படி அதை கணிச்சார்னு இப்பவும் ஆச்சரியமா இருக்கு.. மிரண்டு போயிட்டேன் – அஸ்வின் பேச்சு
இந்தியாவை அதன் திறமை காரணமாக நான் பிடித்த அணி என்று அழைக்கிறேன். ரோகித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். விராட் கோலி மீண்டும் ரன்கள் எடுத்திருக்கிறார். கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சும் நன்றாக உள்ளது. எனது இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறை சிறப்பாகவே செயல்படுகிறது” என்று பேசி இருக்கிறார்.