இந்திய கிரிக்கெட்

எதிரணி டிரெஸ்ஸிங் ரூம் அலற வச்சவர் அபிஷேக்.. ஆனா வாஷிங்டன் சுந்தர் வேண்டாம்.. இவர் போதும் – ஹர்பஜன் சிங் கருத்து

நாளை டி20 உலகக்கோப்பை இரண்டாவது சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணிகள் எந்த மாற்றமும் இருக்காது என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் இதுவரை ரன் எடுக்காத அபிஷேக் சர்மா நிச்சயம் பெரிய அளவில் ரன்கள் எடுப்பார் எனவும், அதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்? என்றும் ஹர்பஜன்சிங் அறிவுரை கூறியிருக்கிறார்.

இரண்டு மாற்றங்கள்

இந்திய அணி இதுவரை தோற்காமல் வெற்றி பெற்று வந்தாலும் கூட திலக் வர்மா மூன்றாவது இடத்தில் அதிரடியாக விளையாடும் தடுமாறி வருவதால் அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி வருகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனை அபிஷேக் சர்மா உடன் துவக்க இடத்தில் விளையாட வைத்து, மூன்றாவது இடத்திற்கு இஷான் கிஷானை கொண்டு வரவேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியில் அதிக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் சரியாக இருக்க மாட்டார் எனவும் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதை ஹர்பஜன் சிங் மறுத்திருக்கிறார்.

- Advertisement -

மாற்றம் இருக்காது

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “அகமதாபாத்தில் இலங்கைப் போல அதிக ஸ்பின்னர்கள் தேவையில்லை. எனவே பந்தை ஸ்விங் செய்யக்கூடிய அர்ஸ்தீப் அணியில் இருப்பார். மேலும் அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்பி வந்து விடுவார். ஏனென்றால் எதிரில் இருப்பது ரைட் லெப்ட் எந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும், அக்சர் படேல் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எனவே அவர் கட்டாயமாக விளையாடுவார்; வாஷிங்டன் சுந்தர் தேவையில்லை”

இதையும் படிங்க : ஹர்திக்கை முதன்முதலா நான் சந்தித்ததும்.. உங்க அம்மாவுக்கு முதல்ல நன்றி சொல்லுங்கன்னு சொன்னாரு.. அப்ப எனக்கு புரியல – தமிழக வீரர் சாய் சுதர்சன்

“அபிஷேக் சர்மா இன்னும் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் அபிஷேக் சர்மா எதிரணி ட்ரெஸ்ஸிங் ரூம்களை அலற விட்டவர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார். அவர் செய்ய வேண்டியது எல்லாம் கொஞ்சம் நேரம் கொடுத்து சில ரன்கள் எடுக்க வேண்டும். பிறகு ரன் தானாக வர ஆரம்பித்து விடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by