ஐபிஎல் இந்திய வீரர்களை இப்படி ஆக்கிடுச்சு.. டி20 உலக கோப்பையை வெல்ல இதை செய்யாம முடியாது – ஹர்பஜன் சிங் பேட்டி

0
38
Harbhajan

ஐசிசி-யின் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் ஜூன் முதல் தேதியில்வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. இதற்கு தயாராக பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் கோடைகாலத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடக்கும் ஐபிஎல் தொடர் வீரர்களை மிகவும் களைப்படைய வைக்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக உடல் ரீதியான களைப்பு என்பதை தாண்டி மனரீதியான களைப்பு உருவாவது சிக்கலுக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்களும் ஐபிஎல் தொடரின் எல்லா போட்டிகளையும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய வீரர்கள். எனவே அவர்கள் கடைசி வரையில் விளையாடுவார்கள். அதே சமயத்தில் உடனடியாக இந்தியாவில் இருந்து விலகி, புதிய சூழ்நிலையான அமெரிக்கா சென்று ஒரு மாதம் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசி இருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “கேப்டன் ரோஹித் சர்மாவால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியாது. அது நம்மைப் பற்றிய ஏதோ அல்லது உங்களைப் பற்றி ஏதோ கிடையாது. அது நாங்கள் என்பது பற்றியது. எந்த அளவிற்கு இந்திய அணி ஒருங்கிணைந்து விளையாடுகிறதோ, அந்த அளவிற்கு வெற்றிகளைக் குவிக்க முடியும்.

ஐபிஎல் ஒரு சோர்வான போட்டி, பயணம் மிகவும் சோர்வாக இருக்கிறது. வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக சோர்வாக இருப்பார்கள். ஆனால் ஐபிஎல் தொடரின் நீட்டிக்கப்பட்ட தொடராக டி20 உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் பார்க்க வேண்டும். உலகக்கோப்பையை விட பெரிய விஷயம் எதுவும் கிடையாது. உங்கள் சிறந்ததை நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் மாறிக்கொள்ள வேண்டும். நீங்கள் கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே ஆர்சிபியை நிச்சயம் தோற்கடிக்கும்.. தோனி இதுக்காகவே ஸ்பெஷலா இதை வச்சிருக்கார் – முகமது கைஃப் பேட்டி

மேலும் உலகக் கோப்பையை வெல்வது எளிதானது கிடையாது. இதற்கு நீங்கள் மனரீதியாக கடினமாக இருக்க வேண்டும். நாம் தற்பொழுது யாருக்கும் தெரியாத ஆடுகளத்தில் விளையாட போகிறோம். நாம் விளையாட இருக்கும் பயிற்சி போட்டிகள் நமக்கு எப்படியான காம்பினேஷனை அமைக்கலாம் என்கின்ற ஐடியாவை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.