உறுதியா சொல்றேன்.. இந்த 4 அணிகள் தான் சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் ஆடும் – ஹர்பஜன் சிங் கணிப்பு

0
336

2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் உலகின் டாப் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் இரு பிரிவுகளாக இந்த தொடரில் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

பார்மில் இல்லாத இந்திய அணி :

இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தற்போது சரியான பார்மில் இல்லை. கடைசியாக இலங்கைக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இதனால் இந்திய அணி இம்முறை அரையிறுதிக்கு செல்லுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி ,கில், ஸ்ரேயாஸ் ஐயர் பும்ரா சாமி போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அரையிறுதி குறித்து ஹர்பஜன் கணிப்பு:

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன் சிங், “என்னைக் கேட்டால் சாம்பியன்ஸ் கோப்பை அரை இறுதிக்கு இந்த நான்கு அணிகள் தான் கண்டிப்பாக இடம்பெறும். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஆஸ்திரேலியா, அணிகள் கண்டிப்பாக அரை இறுதிக்கு சென்று விடுவார்கள்”.

” பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு வந்துவிடும். மற்றொரு அணி என்ன பொறுத்தவரை நியூசிலாந்து தான். இந்த நான்கு அணிகளும் செமி பைனலுக்கு வருவார்கள் என நினைக்கின்றேன். ஜெய்ஸ்வால் இந்திய ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வருகின்றேன்”.

“ஜெய்ஸ்வால் இப்போது விளையாடவில்லை என்றால் பின் எப்போதுதான் விளையாடுவார். பேட்டிங் வரிசை தொடக்கத்தில் இடது கை,வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது நல்ல விஷயம். ஜெய்ஸ்வால் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் அவர் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன்” என்று ஹரபஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -