இந்திய கிரிக்கெட்

ஆஸிக்கு எதிரா நித்திஷ் ரெட்டி செஞ்சது அபூர்வமா இருக்கு.. இளம் வீரர் யாரும் இப்படி செய்யல – ஹர்பஜன் சிங் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 180 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நித்திஷ் ரெட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

நித்திஷ் ரெட்டி சிறப்பான ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தற்போது ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பியிருக்கும் நிலையில் இன்று அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டி பகல் இரவு ஆட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 180 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழக்க, இளம் ஆட்டக்காரரான மிடில் வரிசையில் இறங்கும் நித்திஸ் ரெட்டி சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் என 42 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் இவர் அடித்த சிக்சர் தற்போது அதிக கவனத்தை பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நித்திஷ் ரெட்டி மிக இளமையான வீரராக இருக்கிறார். ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி விளையாட வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதைத்தான் தற்போது செய்தார் மேலும் முன்னதாக அவர் வழக்கம் போல விளையாடினாலும் பார்ட்னர்ஷிப்பை எப்படி அமைக்க வேண்டும் என்று அவர் அறிந்திருக்கிறார். இருப்பினும் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறிய போது அவர் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க:விராட் கோலிக்கு ஸ்டார்க் போட்ட மாஸ்டர் பிளான்.. இந்த மாதிரிதான் செட்டப் செய்தார் – புஜாரா விளக்கம்

மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிராக கவர் திசையில் சிக்சர் அடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. அதற்குப் பிறகு ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் மிகச் சிறப்பான சிக்சர் ஒன்றை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற ஷாட்கள் விளையாடுவது மிகவும் அரிது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இளம் பேட்ஸ்மேனிடம் இத்தகைய ஷாட்கள் வெளிவருவது ஆச்சரியமான விஷயம்” என்று கூறி இருக்கிறார். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by