T20 WC.. சூர்யா சிறந்த பேட்ஸ்மானா இருக்கலாம்.. ஆனா எப்பவுமே இதுல அவருக்கு பெரிய பிரச்சனை இருக்கு.. இந்தியா பாக் போட்டி குறித்து தினேஷ் கார்த்திக்

0
64

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை லீக் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் போட்டியை வெல்வதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து சில முக்கிய விஷயங்கள் பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியானது இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பல்வேறு கட்ட பிரச்சனைகள் பல்வேறு தரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் சூர்யா குமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா என இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. சிறந்த பேட்டிங் விக்கெட்டுகளில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் பந்து வீச்சுக்கு சற்று சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணி எப்படி விளையாடும் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும்போது “நல்ல பேட்டிங் ஆடுகளங்களில் சூர்யா எப்போதுமே சிறந்த வீரர். ஆனால் சற்று மெதுவான ஆடுகளங்களில் அவருக்கு எப்போதுமே சவால்கள் உள்ளன. அவர் பேட்டிங் வேகத்தை பயன்படுத்தி சுற்றியே அனைத்து விஷயங்களும் உள்ளன. சுழற் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் பயன்படுத்துவதை விட மற்ற ஷாட்களை அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

மேலும் அபிஷேக் ஷர்மா முக்கிய பங்கு வகிப்பார். அவர் அதிரடியான தொடக்கத்தை பெறுவதன் மூலமாக அவர் இந்திய அணியை மிகப்பெரிய தொடக்கத்திற்கு அழைத்துச் சென்றால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருக்கும். அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் போது வெளியே செல்வார். ஆனால் மெதுவான ஆடுகளத்தில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -