எந்த கேப்டனும் செய்யாத வேலையை.. ரோஹித் செஞ்சிருக்காரு.. தோனியை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்.. முழு விபரம்

0
344

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பும்ரா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஹர்பஜன் சிங் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா குறித்து தனது பதிலை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஐந்தாவது போட்டியில் விலகிய ரோஹித்

இந்திய அணியின் கேப்டனாக விளங்கி வரும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில் இரண்டாவது போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் பேட்டிங்கிலும் ரோஹித் பெரிதாக செயல்படாததால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி பும்ராவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தான் அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ததாகவும், அது தனக்கு கை கொடுக்காமல் போகவே அணியை விட்டு விலகியதாக கூறியிருந்தார்.

ரோஹித் சர்மாவின் காணொளியை சமூக வலைதளத்தில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்து இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர், ஒரு விளையாட்டில் சக கிரிக்கெட் வீரரான ஸ்ரீ சாந்தை அறிந்தவர் நீங்கள், எனவே நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் குறிப்பிட முடியாது. மேலும் இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மாவின் தந்தைக்கு சொந்தமானது அல்ல எனவே அவர் சிறப்பாக இல்லாவிட்டால் அணியில் விளையாட முடியாது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

தோனியை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்

இதனை பார்த்த ஹர்பஜன் சிங் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியிருப்பதாவது “தயவுசெய்து என்னுடைய முழு நேர்காணலையும் கேளுங்கள். அதற்குப் பிறகு வாய் திறப்பதற்கு முன் ரோகித் சர்மா பேசிய காணொளியையும் பாருங்கள். வெளிநாட்டில் இந்திய அணி தொடர்களை இழந்த போதிலும், ரன்கள் குவிக்காத போதிலும் எந்த இந்திய கேப்டனும் செய்யாத ஒரு வேலையை ரோகித் சர்மா செய்திருக்கிறார்” என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட்க்கு இந்த திறமை இருக்கு.. வேற யார்கிட்டயும் அத பாக்கல – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

இதன் மூலமாக ஹர்பஜன் சிங் மகேந்திர சிங் தோனியை மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மகேந்திர சிங் தோனி 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இழந்திருக்கிறார். அந்தத் தொடரில் தோனி பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. அதற்குப் பிறகு 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதனைத் தான் ஹர்பஜன் சிங் தோனியை மறைமுகமாக விமர்சிக்கிறார் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது.

- Advertisement -