இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டி20 உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. சிலரிடையே விமர்சனம் வந்தாலும் பலருடைய பாராட்டுகளை பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் உலகக் கோப்பை தேர்வு குறித்து சில முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக டி20 உலக கோப்பைக்காண 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கடந்த டி20 தொடர்களில் துணை கேப்டனாக செயல்பட்ட சுப்மான்கில்லை இந்திய கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்தே நீக்கியது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் அக்ஷார் பட்டேலை துணை கேப்டனாக நியமித்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் எனவும் அவரது அனுபவம் இந்திய அணிக்கு தேவை எனவும் பல முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஹர்பஜன் சிங் அஜித் அகர்கரின் தேர்வுக்கு முழு மதிப்பெண்களை வழங்கி இருக்கிறார். அவரது தேர்வு இந்திய அணி t20 உலக கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று கணித்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த அணி உண்மையிலேயே மிகச் சிறந்தது. இந்த அணிக்காக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கு 10/10 என்று முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். கில் இடம் பெறவில்லை என்பது சிறிது வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் அவருக்கு விரைவில் நிறைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தற்போது இருக்கும் அணியை பார்க்கும்போது தங்களது சொந்த திறமையால் போட்டிகளை வென்று கொடுக்கும் சாம்பியன் வீரர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க:3 போட்டிக்கு அப்புறம் தயாராவது சரியல்ல.. கில்லின் இந்த முடிவு மிகவும் சிறப்பான ஒன்று- ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு
அப்படிப்பட்ட அணியே தங்களிடம் இருப்பதால் நாங்கள் தொடர்ச்சியாக உலக கோப்பைகளை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். சூரியகுமார் அதிக ரன்கள் தற்போது குவிக்கவில்லை என்றாலும் பெரிய தொடர்கள் வரும்போது அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார். அபிஷேக் ஷர்மா தன் சொந்தத் திறமையால் போட்டிகளை வென்று கொடுக்கக் கூடியவர். அதேபோல ஹர்திக் பாண்டியா சிறந்த பார்மில் இருக்கிறார். மேலும் மௌலிங்கில் இரண்டு சிறந்த வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்” என்று பேசி இருக்கிறார்.