இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நான்கு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
காயத்தால் வெளியேறிய பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழும் ஜஸ்ரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா வீரர்களை கடைசிவரை பயத்திலேயே வைத்திருந்தார். ஆஸ்திரேலியா வீரர்களும் அவரின் பந்துவீச்சில் அடித்து ஆட விளையாடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடி மற்ற பந்துவீச்சாளர்கள் மூலமாக ரன்கள் குவித்தனர்.
இதுவரை இந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பும்ராவை இந்திய கிரிக்கெட் அணி கரும்பில் உள்ள சாறு போல பிழிந்து எடுத்து விட்டதாக சில காட்டமான விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்.
கரும்பில் உள்ள சாறு போல பிழியப்பட்டார்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கரும்பிலிருந்து சாறு பிழியப்படுவது போல பும்ரா பயன்படுத்தப்பட்டார். டிராவிஸ் ஹெட் வந்துவிட்டார் பந்தை பம்ராவிடம் கொடுங்கள், மார்னஸ் வந்துவிட்டார் பந்தை பும்ராவிடம் கொடுங்கள், ஸ்மித் வந்துவிட்டார் பந்தை பும்ராவிடம் கொடுங்கள் பும்ரா எத்தனை ஓவர்கள் தான் வீசுவார். கடைசியில் அவர் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். அவர் ஒருவேளை ஐந்தாவது டெஸ்டில் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா எட்டு விக்கெட்டுகளை இழந்து மிகக் கடுமையான நிலையில் தான் வெற்றி பெற்றிருக்கும்.
இதையும் படிங்க:நான் கோச்சா இருக்குறப்போ.. இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த ஆஸி வீரரை பெருமையா பேசுவேன் – ரவி சாஸ்திரி பேட்டி
போட்டி கடைசி வரை கடினமாக சென்று இருக்கும். நீங்கள் அவரது முதுகை உடைத்தீர்கள். அவர் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அணி தேர்வும் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக அமையவில்லை. ஒரு பச்சை நிற விக்கெட்டில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள். இவ்வளவு கிரிக்கெட் பார்த்தும் இவ்வளவு கிரிக்கெட் விளையாடியும் இந்த சிறு விஷயம் புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






