கடவுளே ஸ்ரேயாஸ்க்கு இதை நினைக்கிறார்.. ரோகித் கம்பீர் இத மாத்துறதுக்கு யாரு? – ஹர்பஜன் சிங் விமர்சனம்

0
100
Harbhajan

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய பிளேயிங் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்கக் கூடாது என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி இடம்பெறாத காரணத்தினால் மட்டுமே இடம்பெற்றார் என்கின்ற தகவலை ஸ்ரேயாஸ் ஐயர் வெளியில் தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து இந்திய அணியின் பக்கம் வெற்றியை மாற்றினார்.

- Advertisement -

கடவுளே இதை உணர்ந்தார்

இந்த நிலையில் தன்னை நிரூபித்து சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஒரு இளம் வீரரை எதன் காரணத்திற்காக நீக்க வேண்டும்? இது அந்த வீரருக்கு செய்யும் நியாயமான விஷயம் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் காட்டமான தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் தன்னை நிரூபித்து விட்ட ஒரு வீரர். உலக கோப்பையிலும் அவர் தேவையான ரன்கள் எடுத்தார். ஒரு வீரர் இவ்வளவு ரன்கள் எடுக்கும் பொழுது அவர் இயல்பாகவே தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைப்பார். அவர் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறார் எனவே கடவுளும் இதையே நினைக்கிறார்”

- Advertisement -

“யாரும் நினைக்காத ஒன்றை ஸ்ரேயாஸ் ஐயருக்கு மற்றவர்கள் நினைத்தார்கள். அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நினைக்காத விதத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். அவர் ஒரு தலைப்பட்சமாக போட்டியை இந்திய அணியின் பக்கம் மாற்ற அதிரடியான அந்த அரை சதத்தை அடித்தார்”

ரிஷப் பண்ட் காத்திருக்க வேண்டும்

“ரிஷப் பண்ட் மிகவும் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகம் தற்போது முதன்மை விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுலை விரும்புகிறது என்று தெரிகிறது. எனவே ரிஷப் பண்ட் தன்னுடைய வாய்ப்புக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க : இனி ரிஷப் பண்ட் வெளியில்தான்.. காரணம் கேஎல்.ராகுல் இல்லை இவர்தான்.. பாவமா இருக்கு – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

“மேலும் விக்கெட் கீப்பர் வரிசையில் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோரும் காத்திருக்கிறார்கள். மேலும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அணி மிகச் சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன். ரிஷப் பண்ட்டை பொறுத்தவரையில் இன்றோ இல்லை நாளை ஒரு நாளோ அவர் பிளேயிங் லெவனில் இருக்கப் போவது உறுதிதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -