நீங்க இத செய்யலனா உங்களுக்குத்தான் அவமானம்.. கோலிகிட்ட நேரா சொன்னேன் – ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்

0
125
Harbhajan

விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் மற்றும் அவர் தன்னை கிரிக்கெட்டுக்காக எவ்வாறு மாற்றிக் கொண்டார் என்பது குறித்து அவருடன் இணைந்து ஆரம்ப காலகட்டத்தில் விளையாடிய ஹர்பஜன் சிங் சுவாரசியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் என்பது எதிர்காலத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடைய இருக்கும் உயரங்களுக்கான அடிப்படை. எனவே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் என்றால் அதில் முதலில் விராட் கோலியின் பெயரை எழுதும் அளவுக்கு அவர் நிறைய முக்கிய மாற்றங்களை உருவாக்கி இருக்கிறார்.

- Advertisement -

2011 வெஸ்ட் இண்டீஸ்

விராட் கோலி 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்ஸில் 15 ரன் சராசரி உடன் வெறும் 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பம் மிகவும் மோசமானதாக அமைந்தது. இதனால் அவர் மன ரீதியாக மிகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறார். தற்பொழுது அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து கூறியிருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பத்தை பற்றி நான் உங்களுக்கு சொன்னால், அப்பொழுது நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் இல் இருந்தோம். அந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஃபிடல் எட்வர்ட்ஸ் எல்பி டபிள்யு மற்றும் ஷார்ட் பந்துகள் மூலமாக விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தொடர்ந்து விக்கெட்டை கொடுத்து விராட் கோலி மிகவும் ஏமாற்றமாக இருந்தார். அப்பொழுது நான் விராட் கோலியிடம் ” நீங்கள் நல்ல முறையில் இருந்து இந்திய அணிக்காக விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எடுக்க வேண்டும். ஒருவேளை உங்களால் அதைச் செய்ய முடியாமல் போனால், உங்களுக்கு இருக்கும் திறமைக்கு உங்களுக்கு அது அவமானமான ஒன்றாக அமையும்” என்று கூறினேன்.

விராட் கோலியின் மாற்றம்

மேலும் பேசிய ஹர்பஜன் சிங் கூறும்போது “விராட் கோலி தன்னுடைய உணவு முறை மற்றும் மனநிலை என்று மாறுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். நான் சாதாரண வீரராக இருக்கவில்லை மக்களுக்கு நீண்ட காலம் தெரிந்த வீரராக இருக்க விரும்புகிறேன் என்கின்ற பிடிவாதம் விராட் கோலி இடம் உருவானது.

இதையும் படிங்க : தோனி கபில்தேவ் மீது மோசமான குற்றச்சாட்டு.. தன் தந்தை கூற காரணம் என்ன? – யுவராஜ் சிங் விளக்கம்

பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து சதங்கள் அடித்தார். நான் ஒரு ரன் இலக்கு இருக்கும் பொழுது அதை முதல்முறையாக அவர் தலைமையில் இருந்த அணி துரத்துவதற்கு முயற்சி செய்தது. அதில் தோல்வி கூட அடையலாம் ஆனால் அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை அவர்தான் உருவாக்கினார். தொடர்ந்து அவருடைய இந்த அணுகுமுறை இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -