தற்போது இருக்கும் ஸ்பின்னர்கள் பந்தை ஸ்பின் செய்வது இல்லை எனவும், அவர்கள் தங்கள் வாய்ப்புகளை பெறுவதற்காக தைரியமாக இருக்க வேண்டும் எனவும் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் முதல் கொண்டு ஸ்பின்னர்கள் மிகவும் வேகமாக வீசுவதில் கவனம் கொண்டிருப்பதாகவும், தைரியமான முறையில் பந்துவீசி விக்கெட் கைப்பற்றுவதில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கூறியிருக்கிறார். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 115 கிலோ மீட்டர் வேகத்தில் கூட பந்து வீசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “டி20 மற்றும் ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் போல வேகமாக பந்து வீசுகிறார்கள். அவர்கள் பந்தை சுழற்றுவது கிடையாது, மேலும் தாக்குப் பிடிப்பதும் இல்லை. அவர்களுக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை. எனவே அவர்கள் தங்கள் வாய்ப்புகளை பெறுவதற்கு கொஞ்சம் தைரியமாக பந்து வீச வேண்டும்”
“பவுலர்கள் மீண்டும் தங்கள் எச்சிலை பந்தை பளபளப்பாக்க பயன்படுத்தலாம் என்று விதியை கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம். இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு உதவும். அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பந்தை ஸ்கிட் செய்வதற்கு உதவியாக இருக்கும். கூடிய விரைவில் இது சர்வதேச கிரிக்கெட்டிலும் அமல்படுத்தப்படலாம்”
“மேலும் போட்டியின் இரண்டாம் பகுதியில் 10 ஓவர்களுக்கு மேல் புதிய பந்தை பயன்படுத்தலாம் என்ற விதியின் சிறப்பானது. ஏனென்றால் இது பனியின் தாக்கத்தை குறைக்கும். மேலும் இது பந்து வீசும் அணியின் கேப்டன் எப்பொழுது புதிய பந்தை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யும் வகையில் அமையும். எனவே வெற்றி தோல்வியில் பனியின் தாக்கம் குறைந்து விடும்”
இதையும் படிங்க : ஹோட்டல்ல தோனி ரூம்ல இதுதான் நடக்குது.. இப்ப எல்லாரும் அதைத்தான் பேசறாங்க – சாம் கரன் பேட்டி
“ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் பல இளைஞர்களை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. என்னுடைய கண்கள் ரியான் பராக் மீது இருக்கும். அவர் அசாம் கிரிக்கெட்டில் கேப்டனாக அற்புதமான முறையில் செயல்பட்டு இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான முறையில் கேப்டனாக செயல்பட்டு வளர்ந்த வீரராக வரவேண்டும்” என்று விரும்புகிறேன்.