தப்பா நினைக்காதீங்க.. பாகிஸ்தான அணியின் இதை பாருங்க.. பின்ன எப்படி இந்தியாவை ஜெயிக்கும்? – ஹர்பஜன் சிங் விமர்சனம்

0
63
Harbhajan

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு மிகவும் சுமாராக இருப்பதாகவும் இது மிகவும் ஹைப் ஏற்றப்பட்ட ஒரு போட்டி எனவும் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில புள்ளி விபரங்களை எடுத்து வந்து பேசி இருக்கிறார்.

ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி துபாய் மைதானத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், இது அவ்வளவு பெரிய போட்டியாக இருக்காது என அதிரடியாக ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நீங்களே இதை பாருங்கள்

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் என்றாலே உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் அந்த மைதானம் நிரம்பும் அதை ஒட்டிய வணிகமும் மிகப்பெரிய அளவில் நடைபெறும். அதே சமயத்தில் போட்டியும் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியின் தரம் குறைந்ததால் போட்டிகள் ஒரு தலைப்பட்சமாக மாறிவிட்டன.

குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது ” மிகவும் ஹைப் ஏற்றப்பட்ட போட்டியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் பாகிஸ்தான அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் இந்திய அணிக்கு எதிராக 31 ஆவரேஜ் மட்டுமே வைத்திருக்கிறார். பரபரப்பான பேட்ஸ்மேன் பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் இந்திய அணிக்கு எதிராக 25 ரன் ஆவரேஜ் மட்டுமே வைத்திருக்கிறார். பகார் ஜமான் மட்டுமே 46 ரன் ஆவரேஜ் எடுத்து இருக்கிறார். இவரால் மட்டுமே ஆட்டத்தை முடிந்தால் மாற்ற முடியும்”

- Advertisement -

பாகிஸ்தான் அணியால் எதுவும் செய்ய முடியாது

“இதேபோல நீங்கள் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் பாகிம் அஷ்ரப் ஆவரேஜ் எடுத்துக் கொண்டால் 12.5 என்று இருக்கிறது. மேலும் துணை கேப்டன் சவுத் ஷகில் ஆவரேஜ் வெறும் எட்டுதான் இருக்கிறது. இந்த பாகிஸ்தானின் இந்திய அணியை ஏதாவது செய்யும் என்று என்னால் நம்ப முடியாது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : 16 முதல் 18 வருடம்.. பேட்டிங்கில தோனி பாய்க்காக நான் இந்த விஷயத்தை எப்பவும் பண்றேன் – ருதுராஜ் பேச்சு

அதே சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் வெகுவேகமாக விற்று தேர்ந்தெடுக்கின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள் நாள் நெருங்க நெருங்க அதிகரித்தே வருகிறது. ஆனால் ஹர்பஜன் சிங் சொல்வது போல போட்டி ஒரு தலைப்பட்சமாக அமைந்தால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

- Advertisement -