16 முதல் 18 வருடம்.. பேட்டிங்கில தோனி பாய்க்காக நான் இந்த விஷயத்தை எப்பவும் பண்றேன் – ருதுராஜ் பேச்சு

0
67
Ruturaj

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் மகேந்திர சிங் தோனி உடனான தன்னுடைய அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு இளம் வீரர் ருதுராஜை புதிய கேப்டனாக கொண்டு வந்தார். ஜடேஜா அளவிற்கு மோசமாக இல்லாமல் களத்தில் ஓரளவுக்கு நிதானமாக செயல்பட்ட ருதுராஜ் சிஎஸ்கே அணி லீக் சுற்றின் கடைசி போட்டியில் வெல்ல முடியாமல் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் எதிர்காலம்

மகேந்திர சிங் தோனி இதற்கு முன்பாகவே சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து யோசித்து ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக கொண்டு வந்தார். ஆனால் களத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருக்கும் பொழுது செயல்பட முடியாமல் அவரது திறமை பாதித்தது. இதனால் அணியிலும் சில பிரச்சனைகள் உருவானது.

இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகள் கேப்டன் பொறுப்பை ஏற்றும் மகேந்திர சிங் தோனி மீண்டும் அணியை பலப்படுத்தி ருதுராஜை புதிய கேப்டனாக கொண்டு வந்தார். மகாராஷ்டிரா அணிக்காக இளம் வீரராக விளையாடி வந்த ருதுராஜை சென்னை அணி அடிப்படை விலைக்கு வாங்கியது. பின்பு கிடைத்த சில வாய்ப்புகளில் திறமையை நிரூபித்து தற்போது அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறார்.

- Advertisement -

தோனி உடனான எனது சந்திப்பு

இதுகுறித்து ருதுராஜ் பேசும்பொழுது “நான் முதன் முதலில் சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூமில் தோனி உடன் இருக்கும் பொழுது மிகவும் பதட்டமாக இருந்தேன். ஏனென்றால் நான் அப்படிப்பட்ட அந்தஸ்துடைய ஒருவருடன் நெருக்கமாக இருந்தது கிடையாது. இதைப் புரிந்து கொண்ட தோனி பாய் என்னை அணியின் ஒரு வீரராக உணர வைத்து மிகவும் சகஜமான நிலைக்கு கொண்டு வந்தார்”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபியை இந்த அணி ஜெயிக்கும்.. இந்த இந்திய வீரர் அதிக ரன் எடுப்பார் – மைக்கேல் கிளார்க் கணிப்பு

“பிறகு அவருடன் இருக்கும் பொழுது எப்பொழுதும் உணர்வுபூர்வமாக உற்சாகமானதாக இருக்கும். அவர் அருகில் இருக்கும் பொழுது அவருடைய மிகப்பெரிய ஆராவை உணர முடியும். அவருக்கும் எனக்கும் இடையில் 16 முதல் 18 வருடங்கள் வயது வித்தியாசங்கள் இருக்கும். நான் சிஎஸ்கே அணிக்காக எப்பொழுது பேட்டிங் செய்தாலும் தோனி பாய் பேட்டிங் செய்ய வரும் வரையில் களத்தில் விளையாட வேண்டும் என்று நினைப்பேன். நான் ஒவ்வொரு முறையும் அப்படித்தான் விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -