டிவியை தோனி உடைத்த விவகாரம்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹர்பஜன் பதிலடி.. புதிய பதிவால் சர்ச்சை.. என்ன நடக்கிறது?

0
128
Harbhajan

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மகேந்திர சிங் தோனி டிவியை உடைத்தார் என ஹர்பஜன் கூறியது தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுந்த நிலையில், தோனி ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் மறைமுகமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடர் குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதில் அன்கேப்டு வீரர்கள் லிஸ்டில் மகேந்திர சிங் தோனி வருவது ஆரம்பித்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததும் மகேந்திர சிங் தோனி டிவியை உடைத்தார் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

சிஎஸ்கே பிசியோ தந்த பதிலடி

இப்படியான நிலையில் சிஎஸ்கே அணியில் பிசியோவாக இருந்து வருகின்ற டாமி சிம்செக் ஹர்பஜன் சிங் சொன்ன கருத்தை குப்பை என விமர்சனம் செய்தார். மகேந்திர சிங் தோனி எந்த ஒரு இடத்திலும் நிதானம் இழந்து தான் பார்த்ததில்லை என்றும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் கூறியிருந்தார்.

சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனி உடன் நெருக்கமாக இருக்கக்கூடிய ஒருவரே இப்படி நடக்கவில்லை என்று தெரிவித்து விட்டதால், ஹர்பஜன்சிங் தோனியின் மீதான பொறாமையால் அவதூறு பேசுகிறார் என தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஹர்பஜன்சிங் மேல் வைத்த வருகிறார்கள்.

- Advertisement -

ஹர்பஜன் சிங் வித்தியாச பதிலடி

எப்பொழுதும் எல்லா விஷயத்தையும் ஆக்ரோஷமாக அணுகக் கூடிய பழக்கமுடையவராக இருந்து வரும் ஹர்பஜன்சிங், சிஎஸ்கே பிசியோ தந்த பதிலடிக்கு என்ன மாதிரியான எதிர்வினை செய்வார் என சமூக வலைதளங்களில் பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

இதையும் படிங்க : ஒரே போன்ல சாம்சன் என் வாழ்க்கைய மாத்தினாரு.. அவரு பெரிய மனுஷன் – சந்தீப் சர்மா நெகிழ்ச்சி

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் பதிவில் “சமூக வலைத்தளங்களில் காசு வாங்கிக் கொண்டு நம்மை ட்ரோல் செய்பவர்களை டீல் செய்வதற்கான சிறந்த வழி சிரித்துக்கொண்டு கடப்பதுதான்” என்று பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் தான்தோனி பற்றி கூறியது உண்மை என்றும், இதற்குத்தானே விமர்சனம் செய்பவர்கள் காசு வாங்கிக்கொண்டு செய்கிறார்கள் என்றும் ஹர்பஜன் சிங் மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -