நீங்க எவ்வளவு பெரிய வீரராகவும் இருக்கலாம்.. ரன் எடுக்கவில்லை என்றால் அவ்வளவு தான்.. விராட் கோலிக்கு ஹர்பஜன் எச்சரிக்கை

0
32

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விராட் கோலி 38 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் மட்டும் தான் சேர்தார். இன்னும் சொல்லப்போனால் விராட் கோலி முதல் ரன்னை எடுக்க 10 பந்துகளை எடுத்துக் கொண்டார். மேலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறினார்.

இதன் காரணமாக துபாய் ஆடுகளத்தில் விராட் கோலி சாதிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி ரன்களை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன்சிங் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் தந்த அறிவுரை:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நீங்கள் எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக கூட இருக்கலாம். நீங்கள் எவ்வளவு பெரிய சாதனைகளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் நீங்கள் களத்திற்கு வந்து விட்டால் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்”.

“விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்கள் லெக் ஸ்பின்னர் ஆகியோர்களுக்கு எதிராக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக நான் நினைக்கின்றேன். லெக் ஸ்பின்னரை எதிர்கொள்ள விராட் கோலி சில யுக்திகளை பயன்படுத்தியே ஆக வேண்டும். விராட் கோலி அதிக டாட் பால்களை சந்திக்கிறார். அதை சிங்கிள்ஸ் ஆக மாற்றும் வழியை கற்றுக் கொள்ள வேண்டும்”.

- Advertisement -

விராட் கோலி போல் விளையாடுங்கள்:

“ஒரு வீரர் ஃபார்மில் இல்லை என்றால், இது போன்ற சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி நடக்கும் களத்தில் செட்டில் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். இதுதான் தற்போது விராட் கோலிக்கு நடந்து வருகிறது. விராட் கோலி ரன் எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் அவர் அப்படியே சிக்கி கொள்கிறார். விராட் கோலி தமக்குத் தாமே துணையாக நின்று கொண்டு விராட் கோலி போல் முதலில் அவர் விளையாட வேண்டும்”.

“விராட் கோலி எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு சாம்பியன் வீரர். அவர் ஓய்வு பெற்றால் கூட பலரும் அவரை ஜாம்பவான் என்றுதான் அழைப்பார்கள். இந்திய அணிக்காக பல வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். விராட் கோலி தற்போது விளையாடும் போட்டிகளை மகிழ்ந்து விளையாட வேண்டும்”.

இதையும் படிங்க:நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. 5 விக்கெட் எடுத்ததும் நான் அப்படி கொண்டாட காரணம் இதுதான் – முகமது ஷமி பேட்டி

“அவருடைய மனதில் இருக்கும் தேவையில்லாத சிந்தனைகளை வெளியேற்றிவிட்டு சுதந்திரமாக விளையாட வேண்டும். ஒருவேளை இந்திய அணி இறுதியில் ஆப்கானிஸ்தானை எதிர் கொள்ளும் நிலை வந்தால், 3 திறன் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். விராட் கோலி ஆட்டத்தை பார்க்கத்தான் பலரும் வருகிறார்கள். எனவே அவர் என்ஜாய் செய்து விளையாட வேண்டும்”.

- Advertisement -