நேற்று வைபவ் சூர்யவன்சி பும்ரா ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். மொத்தம் 14 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் வெறும் பதினைந்து வயதில் இவ்வளவு அதிரடியாக எல்லா பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்ட பேட்ஸ்மேன் யாருமே இல்லை என்று சொல்லலாம். இதன் காரணமாக அவரைப் பார்ப்பதற்கே ரசிகர்கள் மைதானத்திற்கு வரும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
எல்லோரும் பதட்டப்படுவார்கள்
வைபவ் சூரிய வம்சி கடந்த இரண்டு ஆண்டாக எவ்வளவு அதிரடியாக விளையாடுகிறார் என எல்லோருமே பார்த்து வருகிறார்கள். ஆனாலும் பும்ரா பந்துவீச்சிக்கு எதிராக அவரால் அதிரடியாக ஆட முடியாது என்ற நம்பிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் போது “15 வயதான ஒரு சிறுவன் உலகின் நம்பர் ஒன் பவுலருக்கு எதிராக நேற்று விளையாடினார். முதல் பந்திலேயே அந்த சிறுவன் நேருக்கு நேராக சிக்ஸர் அடித்தான். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட பும்ரா பந்துவீச்சுக்கு எதிராக பதற்றப்படுவார்கள். ஆனால் அந்த சிறுவன் பந்துவீச்சாளரே கிடையாது பந்தையே பார்த்து விளையாடுகிறேன் என்று காட்டினான்”
நிச்சயம் ஆள்வான்
“பும்ரா திரும்பி வருவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் உடனே அடுத்த பந்தை மெதுவாக வீசினார். ஆனால் அந்த சிறுவன் அதையும் கணித்து சரியாக சிக்சர் அடித்தான். அவனுக்கு 15 வயது ஆகி இருந்தாலும், தான் ஆட்சி செய்ய வந்திருக்கிறேன் என்று காட்டினான். நிச்சயம் அவன் ஆட்சி செய்வான்” என்று கூறியிருக்கிறார்.






