தோத்து கூட போங்க.. ஆனா உலக கோப்பையில இதை மட்டும் செய்யாதிங்க – இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் கோரிக்கை

0
1415
Harbhajan

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஆரம்பிக்கிறது. இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவர் குறித்தும் ஹர்பஜன் சிங் முக்கியமான கருத்தைக் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு ட்ரேடிங் மூலமாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கி, ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் நியமித்தது. அந்த அணி நிர்வாகத்தின் இந்த முடிவு அணிக்குள் நிறைய சலசலப்புகளை ஏற்படுத்தியது. மேலும் அந்த அணி மிக மோசமாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து தற்பொழுது ரோகித் சர்மா தலைமையில் ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறார். எனவே ஏற்கனவே நடைபெற்ற சில விரும்பத் தகாத நிகழ்வுகள், டி20 உலக கோப்பை தொடரில் எதிரொலிக்க கூடாது என ஹர்பஜன் சிங் விரும்புகிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும் பொழுது நடக்கும் மிகப்பெரிய விஷயம் நீங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதுதான். ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியவர்கள் ஒன்று சேர்ந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும். நிச்சயம்இது அவர்களுக்கான நேரம். ஐபிஎல் தாண்டி இதை பார்க்க வேண்டும். ஏனென்றால் இது பெரிய விஷயம்.

- Advertisement -

ஐபிஎல் கோப்பையை வெல்வதை விட உலகக்கோப்பையை வெல்வது மிகப்பெரிய சாதனையாகும். எனவே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவை ஒன்றாக இணைத்து ஒரே பக்கத்தில் வைத்து, அவர்கள்ஒன்றாக விளையாடுவதை உறுதி செய்து, தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : 2022 டி20 உலக கோப்பையில்.. ரோகித் கோலி செஞ்ச அதே தப்பை செய்யக்கூடாது – மஞ்ச்ரேக்கர் பேட்டி

நீங்கள் ஒரே அணியாக தொடர்ந்து விளையாடும் பொழுது நீங்கள் வெற்றிக்கு பக்கத்தில் இருக்க முடியும். ஒன்றிணைத்துவெற்றி பெறுவது நிர்வாகத்தின் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன்.அவர்கள் தோற்றால் கூட ஒன்றாக சேர்ந்து விளையாடி தோற்றுப் போகட்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -