2022 டி20 உலக கோப்பையில்.. ரோகித் கோலி செஞ்ச அதே தப்பை செய்யக்கூடாது – மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
105
Rohit

கடந்த முறை 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி இறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த போட்டியில் பேட்டிங்கில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

குறிப்பிட்ட அந்த போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். ஒரு பக்கம் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த காரணத்தினால் இந்திய அணி 20 ஓவர்களில்160 ரன்கள் தாண்டி எடுத்தது. இது திருப்பி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 16 ஓவர்களில் இங்கிலாந்து அணி எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

- Advertisement -

இந்த தொடர் முழுக்கவே இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடியிருந்த போதிலும் கூட, அரை இறுதியில் அவரிடம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஸ்டிரைக் ரேட் இருக்கவில்லை.

இதுகுறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் ” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா வெறும் 96 ஸ்ட்ரைக் ரேட்டில் 28 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 40 பந்துகளில் 125 ஸ்ட்ரைக் ரேட் உடன் 50 ரன்கள் எடுத்து 18 வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணி போட்டியை அங்கேயே இழந்துவிட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா 190 ஸ்ட்ரைக் ரேட்டில் 33 பந்தில் 63 ரன்கள் எடுத்த காரணத்தினால், ஸ்கோர் போர்டில் இந்திய அணிக்கு கௌரவமான ஒரு ஸ்கோர் வந்தது. ஆனால் எந்தவித ஆச்சரியமும் இல்லாமல் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 16 ஓவர்களில் இலக்கை எட்டி வென்றது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. பாகிஸ்தானுக்கு எதிராக ஜெய்ஸ்வால் ஆட முக்கிய 2 காரணங்கள்.. கோலி வேண்டாம்

நிச்சயமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த விராட் கோலி ஆக தற்பொழுது அவர் இருக்க மாட்டார். அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி வெளியில் இருந்து வந்த சத்தங்களால் தற்பொழுது அவர் நிறைய மாற்றி இருப்பார். இது போலவே முக்கியமான போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதற்கு ரோகித் சர்மாவும் தயாராகி இருப்பார் என்று நம்புகிறேன். மீண்டும் இப்படியான தவறுகளை செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.