நல்லவேளை டெல்லி டீம்ல நான் இல்ல.. இருந்தா பிரித்வி ஷாவை அடிச்சிருப்பேன் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
56
Harbhajan

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை என மிகப்பெரிய கவன ஈர்ப்பை ஆரம்ப காலகட்டத்தில் உண்டாக்கியவர் பிரித்வி ஷா. தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, அதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போனவர். இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு மீண்டும் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். நேற்று லக்னோ அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் குறித்து ஹர்பஜன்சிங் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு இளம் வீரர் ஆயுஸ் பதோனி பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் சூழ்நிலையை புரிந்து விளையாடி 35 பந்தில் 55 ரன்கள் கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்தார். இதற்கு காரணமாக அந்த அணி சவால் அளிக்கும் ஸ்கோராக167 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அனுபவ துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்துவிட்டார். மூன்றாவது இடத்தில் அறிமுக வீரரான ஜாக் பிரேசர் மெக்கர்க் களம் இறக்கப்பட்டார். அவர் அறிமுக போட்டியில் விளையாடுவது போல் இல்லாமல் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தன் ரன் கணக்கை அதிரடியாக ஆரம்பித்தார்.

இந்த சூழ்நிலையில் ஒரு பார்ட்னர்ஷிப் தேவையாக இருந்தது. அதே சமயத்தில் எதிரில் இருந்த பிரேசர் அதிரடியாக விளையாடினார். இப்படியான நேரத்தில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் பிரித்வி ஷாவும் அதிரடியாக விளையாடுகிறேன் என்று விக்கெட்டை இழந்தார். பிறகு கேப்டன் ரிஷப் பண்ட் வந்து பொறுமையாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணி வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் பிரித்வி ஷா நல்ல முறையில் விளையாடி 22 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் அடக்கம். அவர் மேற்கொண்டு விளையாடிய அரசதத்தை தாண்டுவார் என எல்லோரும் நினைத்திருந்த பொழுதுதான் விக்கெட்டை பொறுப்பெற்ற முறையில் இழந்தார்.எல்லா ஷாட்டையும் கையில் வைத்திருக்கும் அவர், விக்கெட்டை இப்படி கொடுப்பதுதான் அவருடைய வீழ்ச்சிக்கு காரணம் என பலரும் கூறுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு ஆஸ்திரேலியாவில் 10 நாள் பயிற்சி.. லாங்கர் சாதாரணமான ஆள் கிடையாது – ஆயுஷ் பதோனி பேட்டி

இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “பிரிதிவிஷா நேற்று அங்கு என்ன செய்தார்? உண்மையில் நான் டெல்லி அணியில் இருந்திருந்தால் அவரை தொடர்ச்சியாக அடித்திருப்பேன். அப்பொழுது அந்த ஷாட் தேவையே கிடையாது. அவர் டெல்லி அணியை சிக்கலில் கொண்டு வந்து விட்டார். நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது சூழ்நிலையை கணக்கிட வேண்டும். அவருக்கு பொறுப்பற்ற ஷாட்டுக்கு செல்லும் பழக்கம் இருக்கிறது. இதை அவர் தவிர்த்து இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.