எம் எஸ் தோனி கேப்டனாகியும் பலனில்லை ; இதை செய்திருந்தாலே சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் – ஹர்பஜன் சிங்

0
54

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக சென்னை அணியை வழிநடத்துவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளின் முடிவில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிகண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்தது. கேப்டனாக தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி மீண்டும் கேப்டன் பதவியை எம்எஸ் தோனி இடம் ஜடேஜா ஒப்படைத்தார்.

மீண்டும் எம் எஸ் தோனி கேப்டன் பதவியை ஏற்ற வேளையில் சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிறார் சூழ்நிலையில் தான் இருந்தது. இருப்பினும் சென்னை அணி எம்எஸ் தோனி தலைமையிலும் ஒரு சில தோல்விகளை பெற்று தற்பொழுது மீண்டும் அதே ஒன்பதாவது இடத்தில் தான் உள்ளது.

இந்த ஒரு விஷயம் சென்னை அணிக்கு கிடைத்துருந்தால் நன்றாக இருந்திருக்கும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு விளையாடிய ஸ்பின் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் சென்னை அணியை பற்றி தற்பொழுது பேசியிருக்கிறார்.”நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட தவறுகின்றனர். அதேசமயம் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தீபக் சஹர் காயம் காரணமாக இந்த ஆண்டு விளையாடவில்லை.

எம்எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பின்னரும் எந்த விதமான மாயாஜாலமும் நடைபெறவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த ஆண்டு நடந்திருந்தால், இந்த அணியை கொண்டும் சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியும். கடந்த வருடங்களைப் போல ஹோம் அட்வான்டேஜ் கொடுத்திருக்க வேண்டும். மும்பை மற்றும் டெல்லி அணிகளை எடுத்துப் பார்த்தால் அந்த அணிகள் தங்களுடைய ஹோம் கிரவுண்ட்களில் மிக சிறப்பாக விளையாடி இருந்திருக்கும்.

சென்னை அணியும் அப்படித்தான்,ஹோம் கிரவுண்ட்களில் சென்னை அணியை வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம். சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 56 போட்டிகளில் சென்னை அணி விளையாடி இருக்கிறது அதில் 40 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த அணியும் இந்த அளவுக்கு அதனுடைய ஹோம் கிரவுண்டில் வெற்றி பெற்றது கிடையாது.

எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு ஹோம் கிரவுண்ட் அட்வான்டேஜ் கிடைத்திருந்தால் நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 13 வருடங்களில் சென்னை அணி 11 வருடம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த 11 வருடங்களில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும், ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் வென்றுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு மீண்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்