“டெஸ்ட் கிரிக்கெட்ட தனி ஆளா முன்னாடி கொண்டு போனார்.. அவருக்கே இப்ப இப்படி” – ஹர்பஜன் சிங் வருத்தம்

0
241
Virat

டெஸ்ட் கிரிக்கெட் சுவாரசியப்படுத்தவும் காப்பாற்றவும் நிறைய முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. காரணம் கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்தான்.

ஐசிசி இதற்கென உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என புது திட்டத்தை கொண்டு வந்து, போட்டிகள் டிரா ஆவதை தடுத்து ரசிகர்களை மைதானத்திற்கு கூட்டி வர ஏற்பாடுகள் செய்தது.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து பாஸ்பால் எனும் அதிரடி ஆட்டம் முறையில், தங்களுடைய பாணிக்கு இங்கிலாந்து தாண்டி வெளியிலும் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை உருவாக்கியது.

இப்படி திட்டமிட்டும் திட்டமிடப்படாமலும் டெஸ்ட் கிரிக்கெட் ஏதோ ஒரு வகையில் தற்காலத்தில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற நாம் இன்னும் முன்னே செல்ல வேண்டி இருக்கிறது.

இப்படியான நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆக்ரோஷமான அணுகு முறையாலும், எப்பொழுதும் வெற்றியை நோக்கி மட்டுமே விளையாடுவதாலும், மேலும் பேட்டிங் தனி திறனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிவிக்கப்படாத தூதுவராக விராட் கோலி விளங்கி வந்தார். ஆஸ்திரேலியா லெஜன்ட் வீரர்களே விராட் கோலிக்கு இப்படியான பாராட்டுகளை வழங்கியிருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது அவர் குடும்ப காரணங்களுக்காக 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடாமல் ஒதுங்கி இருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் க்கு வந்து முழுமையாக உள்நாட்டில் தவறவிடும் ஒரு தொடர் இதுதான்.

இன்னும் இது குறித்து சரியான காரணங்களும் தெரியாத நிலையில், ஹர்பஜன்சிங் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள போதும், அவர் மீண்டும் நன்றாக திரும்பி வருவார் என்று நம்புகிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” விராட் கோலி இன்னும் தேர்வு செய்யப்படுவதற்கு வரவில்லை. விராட் போலி மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர் டெஸ்ட் போட்டி முழுமை அடையாது என்பதால் அவர் வருவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : SAT20 பைனல்.. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் காவ்யா டீம் சாம்பியன்.. டர்பன் அணி பரிதாபத் தோல்வி

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பிராண்ட். அது டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு சென்றது. அடுத்த மூன்று போட்டிகளில் விராட் கோலியை பார்க்க முடியாது. ஆனால் எல்லாம் சரியாகி மீண்டும் திரும்புவார்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.