கம்பீர் உடனே புவனேஸ்வர் குமாரை கொண்டு வரணும்.. வெஸ்ட் இண்டீஸ் அந்த விஷயத்தை அம்பலப்படுத்தி விட்டது – ஹனுமா விகாரி பேட்டி

0
0

​மேஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பந்துவீச்சு அணியின் சுமாரான செயல்பாடு காரணமாக, அனுபவமிக்க சீனியர் பாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாரை மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பேட்டர் ஹனுமா விஹாரி அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

​மேஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் குவித்தும், பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் தோல்வியை தழுவியது. 2027 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஹனுமா விஹாரி, புதிய பந்தில் ஸ்விங் செய்ய புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் பவுலர் இந்திய அணிக்கு உடனடியாக தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து ஹனுமா விஹாரி தனது யூடியூப் சேனலில் பேசும்போது “நீங்கள் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய கணிப்பில், அவர் இன்னமும் நாட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் அதை நிரூபித்தும் வருகிறார். உங்களுக்கு களத்தில் அமைதி தேவை, அதை அவர் அணிக்கு கொண்டு வருகிறார். இந்திய செலக்டர்கள், மேனேஜ்மென்ட், கோச் மற்றும் கேப்டன் அனைவரும் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “நீங்கள் சரியான பவுலிங் காம்பினேஷனை கண்டறிய வேண்டும். உங்களால் எப்போதும் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா மட்டுமே நம்பி இருக்க முடியாது. இதுபோன்று காயங்கள் ஏற்படும் போது உங்களுக்கு முறையான பேக்கப் இருக்க வேண்டும். நீங்கள் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் சொல்வேன். புவனேஷ்வர் மற்றும் ஷமியை மீண்டும் அணிக்குள் அழைத்து வாருங்கள். அனுபவம் இருந்தால் உங்களுக்கு ஒரு செக்யூரிட்டி கிடைக்கும். உங்களுக்கு விக்கெட் பிரேக்த்ரூ தேவைப்படும் போது, நீங்கள் அவர்களிடம் செல்லலாம், அவர்கள் அந்த வேலையை செய்து முடிப்பார்கள். அணிக்கு ஸ்டெபிலிட்டி தேவை, அனுபவம் எப்போதுமே பலன் தரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் பேசிய அவர் “வேஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பவுலிங் அட்டாக்கை அம்பலப்படுத்தி விட்டது. அவர்கள் உலகக்கோப்பையில் கூட பங்கேற்காத ஒரு அணி. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை பற்றி யோசித்து பாருங்கள். ஒரு அணியாக நாம் பும்ரா அல்லது ஹார்திக் பாண்டியாவை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என்பதற்கான நேரம் இது. ஒருவேளை காயம் காரணமாக அவர்கள் உலகக்கோப்பையில் விளையாட முடியாமல் போனால் என்ன செய்வது? அப்படி நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன், ஆனால் அப்படி நடந்தால் என்ன செய்வது? அப்படியென்றால் அடுத்து எந்த விக்கெட் டேக்கிங் பவுலர்களை நாம் அணுகுவது?” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -