இந்திய கிரிக்கெட்

அப்பாடா எப்படியோ அந்த பையனை இந்திய டீமை விட்டு தூக்கிட்டாங்க.. இதுதான் நியாயமான முடிவு – விகாரி பேச்சு

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்கான இந்திய பிளேயிங் 11-ல் 26 வயதான ஸ்பின்னர் ரவி பிஷ்னோயை சேர்க்காமல் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளித்த நிர்வாகத்தின் முடிவு மிகவும் சிறப்பானது என்று முன்னாள் இந்திய வீரர் ஹனுமா விஹாரி கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 171 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் பௌலிங் செய்து 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

​இதுகுறித்து ஹனுமா விஹாரி பேசும்போது “இந்திய அணியின் பேட்டிங் எப்போதும் வலுவாகவே இருக்கும் என்பது நமக்குத் தெரியும். பௌலிங் தான் கவலைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. அவரை (பிஷ்னோய்) வெளியே வைத்துவிட்டு குல்தீப்பை விளையாட வைத்தது சிறந்த முடிவு என்று நான் நினைத்தேன். அவர் மிகவும் சிறப்பாக பௌலிங் செய்தார். நியூசிலாந்து தொடருக்கான அணியிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இறுதியாக அவர்கள் அவர் மீது நம்பிக்கை காட்டுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அவர் பேசும்போது “முதல் டி20 போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக பௌலிங் செய்ததாக நான் நினைத்தேன். நிதீஷுக்கு பதிலாக நமன் தாரை விளையாட வைத்தது தைரியமான முடிவு. இது நல்லது என்று நீங்கள் கூறலாம், ஆனால் நிச்சயமாக நிதீஷ் மற்றும் துபே இருவருமே கூடுதல் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்கள். ஆனால் சுழற்சி முறையில் அவர்கள் முடிந்தவரை அதிகமான ஆல்ரவுண்டர்களை சோதித்துப் பார்க்க முயல்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய ஹனுமா விஹாரி “இது இந்திய அணியின் ஆதிக்கம் நிறைந்த வெற்றியாகும். இனிவரும் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் போட்டிபோட வேண்டுமென்றால், முதலில் அவர்கள் டாஸ் வெல்ல வேண்டும். அவர்கள் முதலில் பௌலிங் செய்து இந்தியாவை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். அவர்கள் முதலில் பேட்டிங் செய்தால் 240 ரன்கள் அடிக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts