இங்கிலாந்து இலங்கை அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதிக்கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்து அணி 427 ரன்கள் குவித்தது. அசிதா பெர்னாடோ 5 விக்கெட் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 116 ரன்னில் சுருண்டது. கமிந்து மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்தார். கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 103 ரன்கள் குவித்தார். அசிதா பெர்னாடோ 3 விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து விளையாடிய இலங்கை அணி 292 ரன்கள் மட்டுமே எடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் கஸ் அட்கின்சன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
லார்ட்ஸ் சாதனை
லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட் எடுத்தாலோ அல்லது சதம் அடித்தாலோ அந்த மைதானத்தின் இருக்கும் பலகையில் வீரரின் பெயர் பொறிக்கப்படும். இது ஒவ்வொரு வீரரின் கனவாகவே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் ஏழு மற்றும் ஐந்து விக்கெட் என கைப்பற்றி இரண்டு முறை இந்த போர்டில் கஸ் அட்கின்சன் இடம் பெற்றார்.
இந்த நிலையில் திரும்பி இதே மைதானத்தில் மீண்டும் இலங்கை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றி அடுத்தடுத்து நான்கு முறை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் லார்ட்ஸ் பெயர் பலகையில் இடம் பெற்ற வீரராக சாதனை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : எதுக்குங்க எல்லாரும் தோனி மாதிரி இருக்கணும்?.. கம்பீர் ரோகித் இதுல ஒரே மாதிரிதான் – அஸ்வின் பேட்டி
மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 19 விக்கெட்டுகள் அடுத்தடுத்து கைப்பற்றி இருக்கிறார். இதேபோல் இங்கிலாந்து அணியின் இயான் போத்தம் 46ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக 1978 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். தற்போது இவர் இந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.