இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுத் தொடரான மகாராஜா ட்ராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஏழாவது ஆட்டத்தில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணி மைசூர் வாரியர்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்துள்ளது. இதில் மைசூர் வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் ராகுல் ராவிட்டின் மகன் சமித் டிராவிட் சிறிய கேமியோ விளையாடினாலும் அது அணிக்கு போதுமான வெற்றியை தரவில்லை.
மகாராஜா ட்ராபி தொடரில் இன்று நடைபெற்ற ஏழாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற குல்பர்கா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. 3.3 ஓவர்களில் 18 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் கருணாயர் மற்றும் ராகுல் டிராவிட் மகன் டிராவிட் ஆகியோர் குல்பர்கா அணியை மீட்டெடுத்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 83 ரன்கள் குவித்தது.
இதில் ஓரளவு சிறிய கேமியோ விளையாடிய சமித் டிராவிட் 24 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 34 ரன்கள் குவித்து வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 48 பந்துகளில் 66 ரன்கள் குவிக்க, இறுதியில் ஜே சுஜித் அதிரடியாக விளையாடினார். 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 40 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் மைசூர் வாரியர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய குல்பர்கா அணி தொடக்க ஆட்டக்காரர் சிசோதியா நான்கு ரன்களிலும், கேப்டன் படிக்கல் ஒரு ரன்னிலும் வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய அனீஸ் 24 ரன்களில் வெளியேற, 7 ஓவர்களில் 60 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து குல்பர்கா அணி தடுமாறியது. இதில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்மாறன் ஆர் ஒரு பக்கத்தில் நிலைத்து நின்று அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ஸ்மாறன் ஆர் 60 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 104 குவித்து குல்பர்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு ஜோடியாக பிரவீன் டுபே இறுதிக்கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பிரவீன் டுபே 21 பந்துகளில் 37 ரன்கள் குவிக்க, கடைசி பந்தில் பௌண்டரி அடித்த ஸ்மாரன் குல்பர்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதையும் படிங்க:கோலி முதல் போட்டியில சீக்கிரம் அவுட்.. ஆனா பெரிய ஆளா வருவார்னு அப்பவே இதனால தெரியும் – கம்பீர் பேச்சு
இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குல்பர்கா அணி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து குல்பர்கா அணியின் வெற்றியை உறுதி செய்த ஸ்மாறன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.