கோலி முதல் போட்டியில சீக்கிரம் அவுட்.. ஆனா பெரிய ஆளா வருவார்னு அப்பவே இதனால தெரியும் – கம்பீர் பேச்சு

0
162
Gambhir

சர்வதேச கிரிக்கெட்டில் இதே நாளில் 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தம்புல்லா மைதானத்தில் விராட் கோலி அறிமுகமானார். 16 வருடங்கள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைவு செய்வதை ஒட்டி அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் கவுதம் கம்பீர் மறக்க முடியாத ஒருவராக எப்பொழுதும் நிலைத்திருப்பார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடித்திருந்தபொழுது கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அப்பொழுது கம்பீர் தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை இளம் ஒருவருக்கு கொடுப்பதே சரி என விராட் கோலிக்கு கொடுத்தார். அது அவருடைய தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அப்போது கூறி இருந்தார். இப்படி ஆரம்பித்த இவர்களது நட்பு ஐபிஎல் தொடரில் மிகவும் பகைமையானதாக மாறியது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது பழைய விஷயங்களை எல்லாம் விட்டு இருவரும் மீண்டும் நட்பானார்கள். மேலும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் தற்பொழுது பொறுப்பேற்று இருக்கிறார். மேலும் அவரது பயிற்சியின் கீழ் விராட் கோலி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் கவுதம் கம்பீர் பேசும் பொழுது ” விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிய அந்த போட்டியில் சீக்கிரமே ஆட்டம் இழந்து வெளியேறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் வலையில் பேட்டிங் செய்த விதத்தில், அவர் நாட்டுக்காக இந்திய கிரிக்கெட்டில் நிறைய காலம் சேவை செய்வார் என்று எனக்கு தெரியும். அவர் சிறப்பாகச் செயல்படுவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் கிடையாது.

இதையும் படிங்க : ரோகித் விராட் இல்லை.. இந்த இந்திய வீரர் நண்பர் அண்ணன் எல்லாம் தாண்டி என் குரு – கலீல் அகமத் உருக்கம்

விராட் கோலி ஒரு சிறந்த வீரர் மற்றும் சிறந்த அணுகுமுறை, நல்ல மனோபாவம் கொண்ட வீரர். அவர் இந்திய அணிக்கு வந்த பொழுது எவ்வாறு போராடி அணிக்காக வெற்றி பெறுவது என்பதை தெரிந்து இருந்தார். அவர் தனது அணிகளுக்காக போட்டிகளை வென்ற விதத்தில், அவர் முழு கிரிக்கெட் வாழ்க்கையும் மிகவும் பாசிட்டிவான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -