வில்லியம்ஸனுக்கு பதிலாக முரட்டு வீரரை பிடித்து வந்த குஜராத் டைட்டன்ஸ் ; இந்த முறையும் கப் உறுதியாகிறதா?

0
9918
GT

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் இருந்து 10 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதில் லக்னோ நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு அணியும், குஜராத் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணியும் கொண்டுவரப்பட்டன.

இதில் குஜராத் அணிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் நியமன வீரர்களாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லும், ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ரசித் கானும் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

கடந்த வருடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கட்டமைக்கப்பட்ட பொழுது, அந்த அணி பிளே ஆப்சுக்கு வராது என்பது மட்டும் அல்லாமல் கடைசி இடம்தான் பிடிக்கும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தார்கள்.

ஆனால் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு புள்ளி பட்டியலில் முதல் அணியாக இடம் பிடித்து வந்ததோடு, பிளே ஆப்ஸ் சுற்றில் முதல் இரண்டு ஆட்டங்களையும் வென்று, தனது முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது குஜராத் டைட்டன்ஸ்.

இந்த வருடம் நடைபெற்ற மினி ஏலத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. அவர்களுடைய பலமற்ற மிடில் வரிசைக்கு அவர் பலம் சேர்ப்பார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பதினாறாவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியாக சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யும்பொழுது கால்முட்டி பகுதியில் காயமடைந்ததோடு தொடரை விட்டும் வெளியேறினார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக குஜராத் அணி இங்கிலாந்தின் டேவிட் மலான் மற்றும் ஆஸ்திரேலியாவின் டிராவீஸ் ஹெட் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் குஜராத் அணி சர்வதேச இலங்கை வெள்ளைப்ப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டசன் சனகாவை கொண்டு வந்திருக்கிறது. ஆசிய கண்டத்து வீரர் என்பதால் இந்திய சூழ்நிலையில் இவர் மிக நன்றாகவே செயல்படுவார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் இந்திய மண்ணில் இவர் இந்தியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டும் இருக்கிறார்.

டசன் சனகா ஒட்டுமொத்தமாக 169 டி20 இன்னிங்ஸ்களில் 37 முறை நாட் அவுட் ஆக இருந்து 3702 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இவரது அதிகபட்சம் 131 ரன்கள் நாட் அவுட். ரன் சராசரி 28. ஸ்ட்ரைக் ரேட் 141. மேலும் 92 டி20 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 59 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இலங்கை அணிக்காக ஃபினிஷிங் ரோலில் செயல்பட்டு வரும் இவர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை நல்ல முறையில் முடித்துக் கொடுக்க கூடியவர். ஏற்கனவே குஜராத் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் இல்லை. பினிஷர்களாக நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்னொரு பினிஷரை பிடித்து வந்திருக்கிறது குஜராத் அணி!