நான் இல்லாம ஐபிஎல் சாதனையா.? 90+ ரன்ஸ்.. கில் 7 முறை, கேஎல் ராகுல் 10.. கிங் கோலி இத்தனை முறையா.? வியப்பில் ரசிகர்கள்

0
236

ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 39 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி விளையாடுகின்றன.

இதில் குஜராத் அணி வீரரான சுப்மான் கில் 55 பந்துகளில் 90 ரன்கள் குவித்து சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

குஜராத் கொல்கத்தா மோதல்

18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்ற வரும் நிலையில் இதன் 39 வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க பேட்டிங் தொடங்கிய குஜராத் அணிக்கு அற்புதமான தொடக்கம் கிடைத்தது. சாய் சுதர்சன் மற்றும் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 114 ரன்கள் குவித்தனர்.

இதில் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 36 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அணியின் கேப்டன் கில் 55 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 90 ரன்கள் குவித்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

- Advertisement -

முதல் இடத்தில் கிங் கோலி

90 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்த குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 7 முறை 90க்கும் அதிகமான ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 7 முறை 90 க்கும் அதிகமான ரன்கள் அடித்த ஷேன் வாட்சன் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் உடன் கில் இந்த சாதனையை பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் கே.எல். ராகுல் மற்றும் கிறிஷ் கெயில் ஆகியோர் 10 முறை 90க்கும் அதிகமான ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:GT vs KKR சிஎஸ்கே பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த.. கில் – சாய் சுதர்சன் கூட்டணி.. கோலி – ஏபிடி ஜோடி முதல் இடம்

மேலும் சக குஜராத் அணி வீரரான ஜாஸ் பட்லர் 11 முறை 90 க்கும் அதிகமான ரன்கள் அடித்திருக்கும் நிலையில் இந்த பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரரான கிங் விராட் கோலி 13 முறை அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -