GT vs KKR சிஎஸ்கே பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த.. கில் – சாய் சுதர்சன் கூட்டணி.. கோலி – ஏபிடி ஜோடி முதல் இடம்

0
54

தற்போது நடைபெற்று வரும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி கொல்கத்தா அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

குஜராத் கொல்கத்தா மோதல்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 39 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்த வீசுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினார்கள்.

முதலில் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு மெதுவாக ஆரம்பித்த இந்த ஜோடி 6 ஓவர்களில் 45 ரன்கள் குவித்த நிலையில் அதற்குப் பிறகு தனது கியரை மாற்றியது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 114 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் சாய் சுதர்சன் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

கில் சாய் சுதர்சன் ஜோடி சாதனை

மறுமுனையில் கேப்டன் சுப்மான் கில் 55 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 90 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலமாக தொடக்க ஜோடி ஒரு சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதாவது ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் கூட்டணி 6 முறை சிறப்பாக விளையாடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்திருக்கிறது. இதில் முதல் இடத்தில் பெங்களூர் அணி வீரர்களான விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் ஆகியோர் 10 முறை இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:வெறும் 8 மேட்ச்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய சாய் சுதர்சன்.. அடுத்த விராட் கோலி.. ரசிகர்கள் பாராட்டு

அவர்களுக்கு அடுத்த இடத்தில் இதே விராட் கோலி மற்றும் கெயில் ஜோடி பெங்களூர் அணிக்காக 9 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று 6 முறை பெங்களூர் வீரர்கள் விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஜோடி சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். இதில் நான்கு முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த சிஎஸ்கே வீரர்களான ருத்ராஜ் கான்வே கூட்டணியை கடந்து சென்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -