என்னோட இந்த நிலைக்கு காரணமே சிஎஸ்கேதான்.. அந்த 2 பேர் இல்லனா நான் இல்ல – குஜராத் வீரர் சாய் கிஷோர்

0
218

குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக திகழும் சாய் கிஷோர் கடந்த 2022ஆம் ஆண்டுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகள் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி குறித்தும் எம்எஸ் தோனி குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் இரண்டு ஆண்டுகள்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுழற் பந்துவீச்சுத் துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர் இந்த தொடரில் மொத்தமாக 11 போட்டிகள் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். குஜராத் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரஷீத் கானை விட தற்போது சாய் கிஷோர் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் அணியில் இணைவதற்கு முன்பாக முந்தைய இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இரண்டு ஆண்டுகள் தான் பயிற்சி பெறுவதற்கு ஒரு சிறந்த களமாக இருந்ததாகவும், என் கிரிக்கெட் அங்கு தான் வடிவமைக்கப்பட்டது எனவும் சாய் கிஷோர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

என் கிரிக்கெட்டை வடிவமைத்தவர்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “என்னை வடிவமைப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய பங்காற்றியது. அந்த இரண்டு வருடம் நான் பயிற்சி பெறுவதற்கு பெரிய உதவியாக அமைந்தது. முஸ்டாக் அலி தொடரிலிருந்து என்னை முதலில் ஏலத்தில் எடுத்த அணி சிஎஸ்கே தான். நான் நிறைய கற்றுக் கொண்டேன் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி கையாள்வது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகளை கேட்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நீங்கள் விளையாடும் போது மட்டுமே அதிகமாக கற்றுக் கொள்கிறீர்கள்.

இதையும் படிங்க:ரோஹித் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற.. பிசிசிஐ கொடுத்த அழுத்தம்தான் காரணமா.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ துணைத் தலைவர்

இந்த கோட்பாடுகள் அனைத்தும் உங்கள் தலையில் மட்டுமே இருக்கும் தவிர, விளையாடும் போது தான் பல்வேறு அனுபவங்கள் பெற முடியும். எம்எஸ் தோனியை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் அணியை வழிநடத்திய விதம் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர் அணுகிய அமைதி அதுதான் நான் விளையாட்டை பார்க்கும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் வடிவமைத்தது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மஹி பாய் ஆகிய இருவரும் தான் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் என் கிரிக்கெட்டை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்” என பேசி இருக்கிறார்.

- Advertisement -