இந்த குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மிகவும் குறைந்து மதிப்பிடப் பட்டவர் – மொஹமத் கெய்ப் கருத்து

0
206
Mohammad Kaif

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் நான்காவது ஆட்டத்தில் நேற்று கே.எல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள புதிய அணியான லக்னோவும், ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மற்றொரு புதிய அணியான குஜராத்தும், மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதின.

டாஸில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி லக்னோ அணிக்குத் துவக்கம் தர கேப்டன் கே.எல் ராகுலும் விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கும் களம் புகுந்தனர். பொதுவாகவே மும்பையின் செம்மண் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

ஆட்டத்தின் முதல் ஓவரை வீச வந்த சமி, தனது அப்-ரைட் ஸீம் பொசிசனில் நல்ல வேகத்தில் குட்-லென்த்தில் வீச, அது லக்னோ கேப்டன் கே.எல். ராகுலின் பேட்டில் சின்னதாய் எட்ஜ் எடுத்து, விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கைகளில் தஞ்சமடைந்தது. குஜராத்தின் ஆரவாரமான அப்பீலுக்கு அம்பயர் மறுக்க, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அப்பீலுக்கு போனார். அப்பீலில் அவுட் உறுதி செய்யப்பட்டது. உண்மையில் உலகத்தின் எந்த சிறந்த பேட்ஸ்மேனும் முதல் பந்தாய் அப்படியொரு பந்தை சந்திக்க விரும்பமாட்டார்கள். அப்படியொரு அற்புதமான பேட்ஸ்மேனுக்கு பந்து அது!

மீண்டும் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரான தனது இரண்டாவது ஓவரில் குயின்டன் டிகாக்கிற்கு இரண்டு பந்துகளை கொஞ்சமாய் வெளியில் காட்டிவிட்டு, ஒரு பந்தை அதே லைன் அன்ட் லென்த்தில் உள்ளே தட்ட, குயின்டன் ஸ்டம்புகள் சிதற காலி. சமியின் கையிலிருந்து புறப்பட்ட பந்து, அப்படியே சிறுதும் மாறாமல் காற்றில் பயணித்து, அப்-ரைட் ஸீமோடு (பந்தில் தையல் நேராய்) தரையில் மோதி உள்ளே சென்று ஸ்டம்புகளை தாக்கி சிதறடித்ததைக் காண கண்கள் கோடி வேண்டும். அடுத்து தனது மூன்றாவது ஓவரில் சிறிதளவான இன்-ஸ்விங்கில் மனீஷ்பாண்டேவையும் போல்டாக்கி வெளியேற்றினார்.

வயதாக வயதாக முகம்மது சமி பந்துவீச்சின் தரம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. இதுப்பற்றி ட்வீட் செய்துள்ள இந்திய அணியின் பிரபல முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளதாவது. “சமி மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய திறமையா பவுலர். சுத்த தங்கம்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

உலகின் பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் சமியின் திறமையைப் புகழ்ந்துதான் வருகிறார்கள்!