நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரரான யுஸ்வேந்திர சஹால் தனது அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு சிறப்பான தொடக்கம்
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலமையில் பஞ்சாப் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம அளவில் வலுவாக இருக்கும் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியில் 18 கோடிக்கு வாங்கப்பட்ட சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பெரிய அளவில் தன்னுடைய பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் எனவும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் முதல் இரண்டு இடங்களுக்குள் வருகிறோம். நாங்கள் தற்போது சிறந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பார்த்தால், எங்களிடம் பந்துவீச்சில் 7 முதல் 8 விருப்பங்கள் இருக்கின்றன. அதேபோல பேட்டிங்கில் 9 முதல் 10 வீரர்கள் பேட்டிங் செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள். எனவே இந்த முறை சம நிலையான அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் பஞ்சாப் அணி சாம்பியன் ஆவதற்கு நல்ல அறிகுறி என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க:ஆர்ச்சருக்கு ராஜஸ்தான் அணி செஞ்சது புடிக்கல.. அதான் தூங்கிட்டாரு.. அந்த தூக்கம் எல்லாத்தையும் மாத்திருக்கு – ஆகாஷ் சோப்ரா
முதல் இரண்டு இடங்களைப் பிடித்து பிளே ஆப்களில் இடத்தை பிடிப்பதே தற்போது எங்கள் முழு கவனமாக உள்ளது. தற்போது எங்கள் அணியின் சூழல் நன்றாக உள்ளது. நாங்கள் ஒரு குடும்பம் போல செயல்பட்டு வருகிறோம். அனைவரையும் சமமாக நடத்துகிறோம், மைதானத்திற்கு உள்ளேயும் மைதானத்திற்கு வெளியேயும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். மூன்று போட்டிகள் மட்டும் தான் நடைபெற்ற முடிந்துள்ளது நாங்கள் இரண்டில் வெற்றி பெற்றுள்ளோம். இது நீண்ட தொடர் என்பதால் எதையும் முன்னரே முடிவு செய்ய முடியாது” என்று பேசி இருக்கிறார்.






