வெறும் 3 ரன்னில் தவறவிட்ட சதம்.. எனக்கு வாய்ப்பு இருந்தும் ராகுலிடம் அப்போது இதைத்தான் கூறினேன் – ஜாஸ் பட்லர் ஆச்சரியம்

0
131

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் வெறும் 3 ரன்னில் சதத்தை தவற விட்டது குறித்து குஜராத் அணி வீரர் ஜாஸ் பட்லர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

3 ரன்னில் தவறவிட்ட சதம்

ஐபிஎல் டி20 தொடரின் 35 வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக அசுதோஸ் சர்மா 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும். அதற்குப் பிறகு வெற்றியிலகை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கில் 7 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினாலும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 97 ரன்களில் இருந்த போது கடைசி ஓவரில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் ஸ்டார்கை எதிர்கொண்ட திவேட்டியா முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தார். இதனால் வெறும் மூன்று ரன்களில் தனது அபாரமான சதத்தை தவறவிட்ட நிலையில் இதுகுறித்து பட்லர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதைத்தான் அவரிடம் சொன்னேன்

இதுகுறித்து பட்லர் விரிவாக கூறும்போது “உண்மையிலேயே இந்த போட்டி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. மேலும் பேட்டிங் செய்வதற்கு இது ஒரு அருமையான ஆடுகளமாக இருந்த நிலையில், இதனை ஆழமாக எடுத்துக் கொண்டு தாக்குதல்க்கான தருணங்களை தேர்ந்தெடுத்து விளையாட விரும்பினேன். சிறப்பான பார்ட்னர்ஷிப்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதில் எவ்வளவு சோர்வாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் போட்டியில் அதிக நேரம் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்துள்ளேன். இந்த சமயங்களில் தான் நீங்கள் மிகவும் பிட்டாக மற்றும் இந்த வெப்பத்தின் கீழ் சிறப்பாக விளையாட வேண்டும்.

இதையும் படிங்க:20வது ஓவரில் த்ரில் சேசிங்.. 4வது இடத்தில் திவேட்டியா.. எம்எஸ் தோனி இத்தனை முறையா.? சிஎஸ்கே கேப்டனை வியக்கும் ரசிகர்கள்

நான் டைவ் அடித்து பிடித்த கேட்ச் குறித்து கேட்கிறீர்கள். முதல் ஆறு போட்டிகளில் எனது கீப்பிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே இந்த போட்டியின் மூலமாக அது சிறிது மாறும் என்று நம்புகிறேன். எனது சதம் குறித்து கூற வேண்டும் என்றால் நீங்கள் எப்போதுமே போட்டியை வெல்லத்தான் விரும்புவீர்கள். எனக்கு சதம் அடிக்க சில வாய்ப்புகள் இருந்தன, ஆனால் இதில் இரண்டு புள்ளிகள் பெறுவது தான் முக்கியமான விஷயம். எனது எனது சதத்தை பற்றி கவலைப்படாமல் வெற்றி பெறுவதற்கு விளையாடுமாறு ராகுலிடம் கூறினேன். அவருக்கு நன்றி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று பட்லர் பேசியிருக்கிறார்.

- Advertisement -