இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்து விட்டார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் மகேந்திர சிங் தோனியை மிஞ்சியது மகிழ்ச்சி அளித்தாலும் அதற்காக நான் கிரிக்கெட் விளையாடுபவன் அல்ல என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தோனியை மிஞ்சிய தினேஷ் கார்த்திக்
கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக், கடந்த ஐபிஎல் தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது அவர் பெங்களூர் அணியின் பேட்டிங் ஆலோசகராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் மொத்தம் 11 ஆட்டங்களில் விளையாடி 144 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி எடுத்த
ரன்களை முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது போன்ற சாதனைகள் குறித்து தான் கவரப்பட்டதில்லை என்றும், அணியின் வெற்றிக்காக விளையாடுவதே தான் என்றும் முக்கியமாக நினைப்பதாக தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனி தனது சாதனையை விரைவில் முறியடிக்க கூடும் எனவும் கூறியிருக்கிறார்.
அதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது “இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கிற ஆசையில் தான் நான் நிறைய கிரிக்கெட் விளையாடினேன். இந்தியாவில் விளையாடிய போது நான் ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றேன். முக்கியமாக நாட்டிற்காக விளையாட முயற்சிப்பதும் சிறப்பாக செயல்படுவதும் நான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். ஒருபோதும் நான் சாதனைகளால் ஈர்க்கப்பட்டதில்லை. ஒருவேளை எனக்கு சொந்த சாதனைகள் பெரிதாக இல்லாததால் அது எனக்குத் தெரியாமல் போய் இருக்கலாம்.
இதையும் படிங்க:12 பந்துகள் மீதம்.. கார்டனர் அதிரடி.. கெத்து காட்டிய குஜராத் ஜெயின்ஸ்.. மகளிர் ஐபிஎல் டி20.. யூபி அணி தோல்வி
நான் தோனியை ரன்களில் முந்தி விட்டேன் என்று அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் என்னை தோனி விரைவாக அதில் முந்தி செல்வார். அது எனக்கு பெரிய தொந்தரமாக இருக்கப் போவதில்லை. ஒரு விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையை அவர் தக்க வைத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அது என்னவென்று கூட எனக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது நான் விரும்பக்கூடிய ஒன்றாக மட்டும் நிச்சயம் இல்லை” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.