நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய விதம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணியை பொறுத்தவரை அற்புதமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 41 பந்துகளை எதிர் கொண்டு 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 63 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் கில் 38 ரன்கள் மற்றும் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் 39 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு ஓரளவு சவாலான இலக்கை நிர்ணயித்தார்கள்.
அதற்குப் பின்னர் களமிறங்கிய மும்பை அணிக்கு குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் வெளியேற, ஓரளவு அணியை காப்பாற்றிய திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சூரியகுமார் யாதவ் 48 ரன்கள் மற்றும் திலக் வர்மா 39 ரன்களில் வெளியேற கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் கில் கூறும் போது ” முதல் போட்டிக்கு முன்பாகவே இரண்டாவது போட்டி கருப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் தான் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது ஒரு காரணியாக இருந்தது மேலும் இந்த ஆடுகளம் எங்களுக்கு சரியான வகையில் பொருந்தும். கருப்பு மண் ஆடுகளத்தை பொருத்தவரை பந்து பழையதாகி விட்டால் பௌண்டரி லைனை கிளியர் செய்வது கடினம். அதனால் நாங்கள் பவர் பிளேவை அதிகப்படுத்த முயற்சி செய்தோம்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியாவை நான் இதுக்குதான் முறைத்தேன்.. இதுல தப்பே கிடையாது – சாய் கிஷோர் விளக்கம்
நாம் திட்டம் குறித்து அதிகமாக பேசலாம், ஆனால் அது சில நேரங்களில் மட்டுமே வேலை செய்யும் தவிர சில நேரங்களில் வேலை செய்யாது. ரஷித் கான் நான்கு ஓவர்கள் வீசாதது இதுவே முதல் முறையாகும். அந்த சமயத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் பிரசித் கிருஷ்ணா நன்றாக பந்து வீசினார். அதனால் அப்போது வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடிவு செய்தேன். இது எங்களுக்கு நல்ல சவாலான ஆட்டமாகும்” என்று அவர் கூறியிருக்கிறார்.






